கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் டான் ச்சீ இங், ஷியாரியா நீதிமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் தனிநபர் சட்டவரைவைத் தாக்கல் செய்யும் பொறுப்பை எடுத்துக்கொள்வதில்லை என்று அரசாங்கம் செய்துள்ள முடிவைப் பாராட்டினார்.
கடந்த மே மாதம் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் முதன்முதலாக தாக்கல் செய்த தனிநபர் சட்டவரைவை மீண்டும் தாக்கல் செய்யும் பொறுப்பை அரசாங்கம் ஏற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக நேற்றைய பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தார்.
ஹாடியின் சட்டவரைவைத் தாக்கல் செய்யும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என நஜிப் கடந்த நவம்பரில் அம்னோ ஆண்டுக்கூட்டத்தில் அறிவித்திருந்தார்.