2016 முடிய ரிம50 பில்லியன் கடன் பட்டிருந்த 1எம்டிபி அதன் வங்கிக் கடன்கள், குறுகிய-காலக் கடன்கள் அனைத்தையும் கொடுத்து முடித்து விட்டதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.
“இப்போது 1எம்டிபி-க்கு வங்கிக் கடனுமில்லை, குறுகிய-காலக் கடன்களும் இல்லை”, என நிதி அமைச்சர் என்ற முறையில் நேற்று நாடாளுமன்றத்தில் நஜிப் கூறினார்.
அவர், எர் டெக் ஹுவா(டிஏபி- பக்ரி) கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் அவ்வாறு கூறினார்.
“1எம்டிபியைச் சீர்படுத்தும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் 2015-இலும் 2016-இலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அது புதிதாக சொத்துகள் வாங்கவில்லை”, என்றும் பிரதமர் கூறினார்.
மக்களும் நம்பிட்டாங்க, நானும் நம்டேன்!
நீங்கள் சென்னைமரினா கடல்கரையில்
ஜெயா சமாதியில் மீன்று மறைஅடித்து
சத்தியம்செய்துவிட்டுவாங்க வரும்
தேர்தலில்அமோக வெற்றிபெறுவீர்கள்
இந்த அள்ளிவிட்டான் பேச்சை எப்படி நம்பமுடியும்? நம்பிக்கை நாயகன் – அம்னோவுக்கு வேண்டுமானால் இருக்கலாம். அடிவருடிகளுக்கும் எலும்பு துண்டு ஈனங்களுக்கும் இது நம்பமுடியும்.
அரசாங்கம் ஜாமீன் செய்த Bon கடன்களை யார் செலுத்துவது?? எங்களை கடனாளி ஆக்குவதுமில்லாமல் எங்கள் பேரப்பிள்ளைகளையும் கடனாளி ஆக்கிவிட்டாயே !!! மீத rm40 பில்லியன் கடனை யார் கணக்கில் எழுதுவது???
பொய் சொன்னா நம்பனும் ! அதுவும் அம்னோவின் எழுதப்படாத சட்டம் !