சட்டம் 355 மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?, கேட்கிறார் அந்தோனி லோக்

 

Statethestandonhudududசட்டம் 355க்கான திருத்தங்கள் குறித்து அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். நாடாளுமன்ற அவைத் தலைவரை கேடயமாக பயன்படுத்தக் கூடாது என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் கூறுகிறார்.

தனிப்பட்ட உறுப்பினர் முன்மொழியும் ஒரு மசோதா அரசாங்கம் வழிவிட்டால் மட்டுமே விவாதிக்க அனுமதிக்கப்படும் ஏனென்றால் நிறைநிலை விதிப்படி அரசாங்கக் காரியங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றாரவர்.

அரசாங்கம் வழிவிட்டாலன்றி பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட மசோதா விவாதிக்கப்படமாட்டாது என்பதை அந்தோனி வலியுறுத்தினார்.

ஆகவே, அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று கூறிய அந்தோனி, “மக்கள் அவைத் தலைவரை ஒரு கேடயமாக பாவிக்க வேண்டாம். அவருக்கு அரசாங்கத்தின் உதவியின்றி ஒரு மசோதா விவாதிக்கப்படுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை”, என்று நாடாளுமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.