ரிம1.4 மி. சாலையைப் பார்வையிட மக்களவைத் தலைவர் வீட்டுக்குச் சென்ற எம்பிகள்

dapmpடிஏபி  எம்பிகள்  இருவர்,   ரிம1.4 மில்லியன்    செலவில்  கட்டப்பட்ட   சாலையைப்  பார்வையிட  இன்று  கோலாலும்பூர்,  ஜாலான்  துங்குவில்   உள்ள    மக்களவைத்   தலைவர்   பண்டிகார்   அமின்  வீட்டுக்குச்  சென்றனர்.

அங்கு  சென்றதும்   டிஏபி   செர்டாங்   எம்பி   ஒங்   கியான்  முங்,   செகாம்புட்  எம்பி    லிம்  லிப்   எங்   ஆகிய   அவ்விருவரும்    பண்டிகார்  வீட்டின்   கதவைத்   தட்டினர்.

அங்கு   வந்த   ஒருவர்   பண்டிகார்  வீட்டில்   இல்லை   என்றார்.

அவருடன்  பேச்சு  கொடுத்ததில்   பண்டிகார்  இதுவரை    பயன்படுத்தி  வந்த    100-மீட்டர்   சாலை   ஒரு  தனியார்  சாலை    என்பதை  அவர்கள்   தெரிந்து  கொண்டனர்.