ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதி பரிபாலனம்) சட்டம் (சட்டம் 355) க்கான திருத்தங்கள் மசோதா குறித்த விவகாரத்தில் மிக அண்மையச் சம்பவங்களுக்காக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பதவி துறக்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கூறுகிறார்.
அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்ற தோற்றத்தை பிஎன் உருவாக்கியிருந்தாலும் அந்த அதிர்ச்சி எதிர்ப்பார்க்கப்பட்டதே என்று ஹுசாம், அமனா உறுப்பினர், கூறினார்.
ஹாடியின் தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை அரசாங்கம் எடுத்துக்கொள்ளாது என்று கடந்த புதன்கிழமை பிரதமர் நஜிப் அறிவித்திருந்ததைக் குறிப்பிட்ட ஹூசாம், பாஸ் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவித்த பாஸ் தலைவர் மற்றும் குழுவினர் அனைவரும் பதவி துறக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அட இவன் ஒருத்தன் ! நஜிப்பும் அடியும் எந்த நேரத்திலும் சம்மந்தி ( அப்படிப்பட்ட நெருக்கம் )ஆகிவிடுவார்கள் ! இது புரியாமல் !
பாஸ்தலைவர்அடிக்குஅரசியல்ஞானம்மிகவும்
கம்மி,பாஸ்கட்சிக்குதலைவராக இருக்க
லாக்கற்றவர்!