மகாதிர்-நஸ்ரி விவாதம் நடக்கும், ஆனால் போலீஸ் நிபந்தனைகள் உண்டு

 

MNdebateonமுன்னாள் பிரதமர் மகாதிர் மற்றும் சுற்றுலா மற்றும் பண்பாட்டுதுறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் ஆகிய இருவருக்குமிடையிலான விவாதம் திட்டமிட்டப்படி நடக்கும் என்று கும்புலான் மீடியா காராங்கிராப் நிறுவனர் ஹுஷாமுடின் யாகுப் உறுதிப்படுத்துகிறார்.

அந்த விவாதம் ஏப்ரல் 7 இல் தேவான் சுல்தான் முகம்மட் கெ-5, கொம்பிளக்ஸ் காராங்கிராப், ஷா அலாமில் நடத்தப்படும் என்று அதன் ஏற்பாட்டாளர் மார்ச் 27 இல் போலீஸ்சுக்கு தெரிவித்துள்ளார்.

போலீஸிடமிருந்து மார்ச் 31 தேதி இடப்பட்ட பதில் கடிதத்தை அவர் தமது சமூக மீடியாவில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இருப்பினும், போலீஸ் பாதுகாப்பு மற்றும் பொதுஒழுங்கு ஆகியவற்றுக்காக சில நிபந்தனைகளை விதித்துள்ளாதாக ஹுஷாமுடின் தெரிவித்துள்ளார்.