பெருகி வரும் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு இந்தியா மலேசியாவின் உதவியை நாடுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
“அது பொருளாதாரத்துக்கும் நிலைத்தன்மைக்கும் மருட்டலாக உருவாகலாம். அதனால் மலேசியாவுடன் சேர்ந்து பயங்கரவாத- எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர விரும்புகிறோம்”, என்றாரவர்.
மோடி, இந்திய வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பயங்கரவாத்தை முறியடிக்கும் நஜிப்பின் முயற்சிகள் தம்மை மிகவும் ஊக்குவித்திருப்பதாகக் குறிப்பிட்ட மோடி, இந்தியா அவரது அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகக் கூறினார்.
அதற்கு நஜிப், மலேசியா அதன் பயங்கரவாத- எதிர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாக இருப்பதாய் கூறினார். ஐஎஸ் உள்பட, பயங்கரவாதத்தை எதிர்ப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்று மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடியை முஸ்லீம்கள் மற்றும் இஸ்லாத்தின் எதிரி என பொங்கி எழுந்தவர்கள், இன்று மோடியுடன் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க போகிறோம் என்று கோமாளி நகைச்சுவை பண்ணுவது ரொம்ப ஓவர்