போலீசார்: குழப்பவாதிகள் புகுந்து விவாதத்தைக் குழப்பி விடலாம்

fuadகுழப்பவாதிகள்  விவாதத்துக்கு    இடையூறு     செய்யலாம்   என்பதால்   அமைச்சர்   நஸ்ரி   அப்துல்   அசிசுக்கும்    முன்னாள்   பிரதமர்   மகாதிர்  முகம்மட்டுக்குமிடையிலான   விவாதத்துக்கு   சிலாங்கூர்   போலீஸ்     தடை    விதித்தது.

“அந்நிகழ்வு   நடந்தால்   சில   தரப்புகள்   இடையூறு  செய்யலாம்   என்று  உளவுத்தகவல்கள்  கிடைத்தன”,  என   சிலாங்கூர்   போலீஸ்  துணைத்   தலைவர்    முகம்மட்  புவாட்    அப்துல்  லத்திப்   இன்று     செய்தியாளர்களிடம்   கூறினார்.

ஏப்ரல்   7-இல்  நடைபெற  விருந்த   அந்நிகழ்வுக்கு  முன்னர்  கொடுத்த  அனுமதியை   போலீஸ்   இரத்துச்   செய்ததற்கு   அதுவும்   ஒரு   காரணமாகும்.

எழுத்து   வடிவ   அனுமதி  கொடுக்கப்பட்டு   24-மணி   நேரத்துக்குள்   அது    மீட்டுக்கொள்ளப்பட்டதாக   விவாதத்துக்கு   ஏற்பாடு   செய்த     சினார்   ஹரியான்   கூறிற்று.

அந்நிகழ்வுக்கு   எதிராக   18   போலீஸ்  புகார்கள்   செய்யப்பட்டுள்ளதாகவும்  புவாட்  தெரிவித்தார்.

விவாதம்  இரத்துச்   செய்யப்பட்டதற்கு   போலீஸ்   புகார்களும்   காரணம்    என்று   தெரிகிறது.

“முதலில்  ஒன்றிரண்டு   வந்தன.    கண்டுக்கொள்ளாமல்   இருந்தோம்.

“ஆனால்,  இன்று  காலை   18  புகார்கள்   வந்தன”,  என்றார்.

ஷா  ஆலம்  குடியிருப்பாளர்கள்   மட்டுமல்ல,   கிள்ளான்,   செர்டாங்,   பெட்டாலிங்   ஜெயா,  உலு   சிலாங்கூரிலிருந்துகூட   புகார்   செய்திருக்கிறார்கள்     என்றாரவர்.