கடவுள் பற்றி கூறிய கருத்துக்காக சித்தி காசிம் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்

 

Sitikassimகடவுள் இருப்பது பற்றி கூறிய கருத்துக்காக வழக்குரைஞர் சித்தி ஸபெடா காசிம்மின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) அவரை அழைக்கவிருக்கிறது.

அந்த வழக்குரைஞர் குற்றம் புரிந்திருந்தால் அவருக்கு எதிராக மாநில இஸ்லாமிய சமய இலாகா நடவடிக்கை எடுக்கலாம் என்று பிரதமர் துறையின் துணை அமைச்சர் அஸிராப் வாஜ்டி டுசுக்கி கூறினார்.

சமீபத்தில் ஓர் ஓன்லைன் சீன ஊடகத்திடம் கடவுள் இருப்பது பற்றி சித்தி காசிம் கூறியிருந்த கருத்து பற்றி பேசுவது ஜாக்கிமின் செயல்முறையாக இருக்கும் என்று அந்தத் துணை அமைச்சர் மேலும் கூறினார்.

அவரது கருத்தை அவரிடமிருந்து நேரடியாக பெற ஜாக்கிம் விரும்புகிறது என்றாரவர்.

– பெர்னாமா.