எப்ஜிவி-யில் முதலீடு செய்ததில் இபிஎப்-புக்கு ரிம203மில்லியன் இழப்பு

epfஊழியர்   சேமநிதி  வாரியம்(இபிஎப்) ,  கடந்த   ஆகஸ்டில்  அதன்   வசமிருந்த   பெல்டா  குளோபல்   வென்ட்சர்ஸ் (எப்ஜிவி)   பங்குகளை  விற்றதில்   ரிம203.18  இழப்பு  ஏற்பட்டது.

கடந்த   திங்கள்கிழமை   நிதி  அமைச்சு   நாடாளுமன்றத்தில்   வழங்கிய   எழுத்து  வடிவ   பதிலில்    இது   குறிப்பிடப்பட்டிருந்தது.

“இபிஎப்   எந்தெந்த  நிறுவனங்களில்   நிதிநிலை    தொடர்ந்து    சரிந்து   வருகிறதோ,   நிர்வாகத்தில்   குறைபாடு   காணப்படுகிறதோ    அந்த   நிறுவனங்களில்    வைத்துள்ள    பங்குகளை    குறைத்துக்கொள்ளும்   அல்லது    முற்றாக  விற்று   விடும்”,  என  அமைச்சு   அவ்வாரியத்தின்   முதலீட்டு   வியூகத்தை    விளக்கினார்.

தொடக்கத்தில்   இபிஎப்,   எப்ஜிவி-இல்  4.5 விழுக்காடு   பங்கு    வைத்திருந்தது.  பின்னர்   அது  2013-இல்  8.49  விழுக்காடாக   உயர்ந்தது.

எப்ஜிவி     2012-இல்  கோலாலும்பூர்   பங்குச்    சந்தையில்   முதன்முதலாக  அதன்    பங்குகளை    வெளியிட்டபோது  (ஐபிஓ)   அதன்   மூலமாக    ரிம10 பில்லியன்   மூலதனத்தைத்   திரட்டியது.   அந்த  ஆண்டில்   உலகிலேயே     ஃபேஸ்புக்   நிறுவனத்துக்கு   அடுத்தபடியாக   மிகப்  பெரிய  ஐபிஓ-வாக    அது   கருதப்பட்டது.

அந்நிறுவனத்தின்    ஒரு  பங்கு    ரிம4.55  ஆகக்  கைமாறியது.  ஆனால்,  அதன்  பின்னர்  பங்குவிலை  தொடர்ந்து   இறங்குமுகமானது.

2015-இல்   அது   ரிம1.19   என  ஆகக்  குறைந்த  நிலைக்கு  இறக்கம்  கண்டது.

இதைப்  பதிவிடும்   நேரம்   எப்ஜிபி   பங்குகளில்  பரிவர்த்தனை    ரிம2.09  ஆக   இருந்தது.