சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமயப் பரப்பாளர் ஜாகிர் நாய்க் மலேசியாவுக்குள் நுழைய தடை ஏதுமில்லை, ஏனென்றால் அவர் இந்நாட்டுச் சட்டம் எதையும் மீறவில்லை எனத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நாடாளுமன்றத்தில் கூறினார்.
“அமலாக்க நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நாட்டின் பாதுகாப்புக்கும் பொது ஒழுங்குக்கும் மருட்டலாக விளங்கக் கூடியவர்க்ளைக் குடிநுழைவுத் துறை கருப்புப் பட்டியலிடும்.
“ஆனால், ஊடகச் செய்திகளை மட்டுமே வைத்து தனிமனிதர் எவரும் கருப்புப் பட்டியலிடப்பட மாட்டார்”, என உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
நாடாளுமன்றத்தில் எம்.குலசேகரன் (டிஏபி- ஈப்போ பாராட்), பயங்கரவாத்துடன் தொடர்புள்ள ஜாகிர் நாய்க் மலேசியாவுக்குள் நுழைவது ஏன் தடை செய்யப்படவில்லை என்று கேட்டிருந்த கேள்விக்கு எழுத்து வடிவில் அளித்த பதிலில் துணைப் பிரதமர் இவ்வாறு கூறினார்.
இந்தநாட்டைவிட்டுப்போனால்கைது
செய்யப்படுவான் அதனால்வாலைசுருட்டி
அதுக்குள்ளே வெச்சிருக்கான்!
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமயப் பரப்பாளர் ஜாகிர் நாய் மலேசியாவுக்குள் நுழைய தடை ஏதுமில்லை,
ஏனென்றால் இந்நாட்டு இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பதை ஜாகிர் நாய் சொற்பொழிவு உறுதி செய்கிறது.
இங்கு சமய பிரச்சார கூட்டங்களில் பேசும் போது மட்ற சமயங்கள இழிவுப் படுத்தி பேசுவது குற்றம் ஆகாதா..? அதானே ஜாகிர் நாய்க் செய்து கொண்டு வருகிறான.