நஸ்ரி: விவாதத்தை போலீஸ் மண்டபத்தில் அல்லது தென்துருவத்தில் பெங்குவின் பறவைகளுடன் வைத்துக்கொள்ளலாமே!

NazridebateinAntarticaமகாதிர்-நஸ்ரி விவாதம் இரண்டாவது முறையாக போலீஸால் தடுக்கப்பட்டதால் எரிச்சலடைந்துள்ளதாக காணப்பட்ட சுற்றுலா மற்றும் பண்பாடுதுறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் அந்த விவாதத்தை செராஸிலுள்ள போலீஸ் மண்டபத்தில், அல்லது இன்னும் சிறப்பான, தென்துருவத்தில் (அன்டார்டிக்கா) வைத்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

பெங்குவின் பறவைகளுக்கு பகசா மலேசியாவோ ஆங்கிலமோ புரியாது. ஆகையால் கலவரம் எதுவும் நடக்காது என்று கூறிய அவர், விவாதத்தை வெளிநாட்டில், லண்டன், கிரீன்லாந்து அல்லது அன்டார்டிக்காவில்கூட, நடத்துவதற்கு தயார் என்றார்.

இன்று பின்னேரத்தில் நாடாளுமன்ற ஊடக அறையில் செய்தியாளர்களுடன் பேசிய நஸ்ரி போலீஸ் தடை பற்றி குறிப்பிட்ட போது இவ்வாறு கூறினார்.