ஹாடியின் மசோதா தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் தள்ளிவைக்கப்படும்

 

Pasintentionthanksபாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் தனிப்பட்ட உறுப்பினர் சட்டம் 355 க்கான திருத்தங்கள் மசோதா வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த மசோதா மறுபடியும் தள்ளிவைக்கப்படும்.

பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி விளக்கம் அளித்த போது இதனைக் கூறினார்.

மலேசியாகினியிடம் ஓர் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் இதனை உறுதிப்படுத்தினார். அவர் பெயரைக் குறிப்பிடவில்லை, ஏனென்றால் அந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஊடகத்துடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்..

“இது கடைசி நாளில், வியாழக்கிழமை, என்று நினைக்கிறேன். இது தாக்கல் செய்வது மட்டும்தான். விவாதம் இல்லை”, என்று அவ்வட்டாரம் கூறியது.

இந்த மசோதா தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வாக்களிப்புச் செல்லாது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸாகிட் கூறியிருந்தார்.

ஆனால், அப்போது இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறவில்லை.

கிடைத்துள்ள தகவலின்படி, ஸாகிட்டின் விளக்கமளிப்புக் கூட்டத்தில் மசீச மற்றும் மஇகா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.

மசீச மற்றும் இதர பங்காளிக்கட்சிகள் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனவா என்று கேட்டதற்கு, அந்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஸாகிட் அவர்களின் கருத்தைக் கேட்கவில்லை; விளக்கம் மட்டும் அளித்தார் என்று கூறினார்.

நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடர் வியாழக்கிழமை முடிவடையும்.