ஐஜிபி: மகாதிர்- நஸ்ரி விவாதத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் போலிசுக்கு உண்டு

debate போலீசார்,   பொது   ஒழுங்கைக்  கருத்தில்   கொண்டுதான்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கும்    அமைச்சர்   நஸ்ரி   அப்துல்   அசிசுக்குமிடையிலான   விவாதத்துக்குத்    தடை   விதிக்க    முடிவெடுத்தனர்.

அப்படி  ஒரு முடிவெடுக்கும்    அதிகாரத்தைக்  கூட்டரசு  அரசமைப்பு  போலீஸ்   சட்டம்     போலீசுக்குக்  கொடுத்துள்ளது   என    இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  (ஐஜிபி)   காலிட்  அபு  பக்கார்   கூறினார்.
“இதற்குமுன்  எத்தனையோ  விவாதங்களுக்கு   இடமளிக்கப்பட்டுள்ள   வேளையில்   இப்போது   போலீஸ்   அதிகாரத்தை  மீறி   நடந்து  கொள்வதாகக்  குற்றஞ்சாட்டுவது  நியாயமல்ல.

“அனுமதி  மறுக்கப்படுகிறது    என்றால்,  பொதுமக்களின்  பாதுகாப்புக்கும்   நலனுக்கும்   மருட்டல்   உண்டாகலாம்   என்ற  ஆதாரத்தின்பேரில்தான்   போலீஸ்  அப்படி  ஒரு  முடிவெடுத்துள்ளது   என்பதைப்  புரிந்து  கொள்ள   வேண்டும்”,  என்றார்.

ஏப்ரல்  7-இல்,  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த   மகாதிர்- நஸ்ரி  விவாதத்துக்குக்  கொடுத்த  அனுமதியை   போலீஸ்  மீட்டுக்கொண்டது    அதிகாரத்தை  மீறிய   செயலாகும்   என்று  குறைகூறப்பட்டிருப்பது    குறித்துக்   கருத்துரைத்தபோது  காலிட்   இவ்வாறு   கூறினார்.