புத்ரா ஜெயா மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் பட்டங்களுக்குப் பரிந்துரைப்பதற்காக ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டாருக்குக் கையூட்டுக் கொடுக்க முயன்ற 54-வயது வணிகரின் தடுப்புக் காவலை நீட்டித்துள்ளது.
விசாரணைக்கு உதவியாக தடுப்புக் காவலை நீட்டிக்க வேண்டி மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் மனு செய்திருந்தது.
கிள்ளானைச் சேர்ந்த அந்த “டான்ஸ்ரீ”-இன் தடுப்புக் காவல் இன்றுடன் முடிவுக்கு வருவதாகக் கூறிய ஸ்டார் ஆன்லைன், மெஜிஸ்ட்ரேட் நிக் இஸ்ஃபானி தஸ்னிம் அப் ரஹ்மான் மேலும் மூன்று நாள்களுக்கு அதை நீட்டித்தார் என்று குறிப்பிட்டது.
அப்படி பார்த்தா நாட்டுல உள்ள நூற்றுக்கு தொண்ணூறு டான்ஸரீக்களும், டத்தோக்களும், தடுப்பு காவலில் அல்லவா இருக்க வேண்டும்!
எல்லாம் நாடக மேடை. சிறந்த நடிகன் வாழ்கிறான். மற்றவன் கம்பி எண்ணி சாகிறான்…..
இது கடந்த 60 ஆண்டுகளாகவே நடக்கிறது. எல்லாருக்கும் தெரிந்ததே– இன்னும் எவ்வளவோ.