நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்குக் கொண்டுவருவதற்கு முன்பு, 1976 சட்ட சீரமைப்பு (திருமணம், மணவிலக்கு)ச் சட்டம் அல்லது சட்டம் 164இன் உத்தேச திருத்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவில் திருமணத்தைக் கட்டுப்படுத்தும் அச்சட்டம், சிவில் நீதிமன்றத்தில் ஒரு முஸ்லிமின் உரிமைகள், ஒரு குழந்தையின் சமயத் தகுதி, அதைப் பராமரிக்கும் உரிமை, ஜீவனாம்சம், சொத்து பகிர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று ஹாடி கூறினார்.
“சட்டம் 164க்குக் கொண்டுவரப்படும் திருத்தங்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பாஸின் கருத்து. குறிப்பாக, கூட்டரசு அரசமைப்பில் கூறப்பட்டுள்ளபடி எந்தவொரு தரப்பின் குறுக்கீடுமின்றி தங்களின் சமயத்தைப் பின்பற்றவும் தற்காக்கவும் முஸ்லிம்களுக்குள்ள உரிமையை அது பாதிக்கும்”, என்றார்.
கடந்த நவம்பரில் முதல் வாசிப்புக்கு வந்த அச்சட்டத் திருத்த வரைவு, ஒரு குழந்தை, பெற்றோர் ஒருவரின் மதமாற்றத்துக்கு முன்பு எந்தச் சமயத்தைச் சார்ந்திருந்ததோ அந்தச் சமயத்திலேயே தொடர்ந்து இருக்கும் என்ற விதியைக் கொண்டுள்ளது.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி 18-வயதை எட்டியதும் அவர்கள் விரும்பும் சமயத்தைப் பின்பற்றலாம்.
பெற்றோரில் ஒருவர் மதம் மாறும்போது சிறார்கள் ஒருதலையாக மதமாற்றம் செய்யப்படுவதால் எழும் விவகாரங்களைக் கருத்தில் கொண்டே அச்சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு வேறொரு தீர்வை, இப்போது பரிந்துரைக்கப்பட்டிருப்பதைவிட மேலும் நியாயமான, விரிவான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய தீர்வு ஒன்றை முன்மொழிய சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஹாடி கூறினார்.
அதில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதாரும் இடம்பெற வேண்டும். அது தேசிய பாட்வா மன்றம், மலேசிய ஷியாரியா நீதிமன்றத் துறை, என்ஜிஓ-கள் முதலானோரின் கருத்துகளையும் செவிமடுக்க வேண்டும்.
வணக்கம். சிவில் முறைப்படி திருமணம் செய்யும் நாங்கள் எதற்கு உங்கள் ஷரிய சட்டத்தை பின் பற்ற வேண்டும்.
இந்த கம்மனாட்டிக்கு முஸ்லிம்களுக்கு என்னமோ தனி உரிமை இருக்கிறது போல் பேசுவான். சுதந்திரத்திற்கு முன் இப்படி பேசி இருக்க வேண்டும். இப்போது திமிரோடு பேசும் இனங்கள். எல்லாம் MIC MCA நாதாரிகளால் வந்த வினை.
அருமையான திட்டம். அதெபோல் இஸ்லாம் மதம் வேண்டாம் என்று வெளிவர நினைக்கும் பலருக்கு இதே போல் ஒரு திட்டம் ஏன் எப்போதும் பரிசீலனைக்கு வர விட மாட்டிர்கள்…. உங்களுக்கு வந்தால் இரத்தம், மற்ற மதற்றவர்க்கு வந்தால் தக்காளி சட்டினியா ????
சிவில் முறைப்படி திருமணம் புரிந்தவர்களில் கணவனோ அல்லது மனைவியோ இஸ்லாம் மதத்திற்கு மாற விரும்பினால், சிவில் முறைப்படி விவகாரத்து பெற்ற பின்புதான் இஸ்லாம் மதத்திற்கு மாறலாம் என்று இருந்திருந்தால் இஸ்லாம் மதம் மாறியவர்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம.
ஆனால் ஹாடி போன்றவர்கள் வழியில் கிடக்கும் சாணியை வாயில் அள்ளி போட்டு கொண்டு மதத்தை காரணம் சொல்வதுதான் விந்தையாக இருக்கிறது.