ஜாஹிட் விவாதம் இரத்துச் செய்யப்பட்டதற்கான காரணங்களை ஆராய்வார்

dpmஉள்துறை   அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடி,  பெரிதும்   எதிர்பார்க்கப்பட்ட   முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கும்   சுற்றுலா, பண்பாட்டு   அமைச்சர்   நஸ்ரி    அப்துல்  அசிசுக்குமிடையிலான   விவாதம்  இரத்துச்   செய்யப்பட்டதற்கான   காரணங்களை   முதலில்   ஆராய்வார்.

விவாதத்தை   அனுமதிப்பதா   வேண்டாமா   என்று   முடிவெடுப்பதற்குமுன்   உள்துறை  அமைச்சு   அதைச்   செய்ய   வேண்டியிருப்பதாக    அவர்   சொன்னார்.

“முதலில்  அதை  (காரணத்தை)  ஆராய   வேண்டும்.   அதன்  பின்னர் விவாதம்   நடைபெறலாம்   எனத்   தோன்றினால்  போலீசிடம்   அனுமதி   கொடுக்கச்   சொல்வோம்”,  என  புத்ரா  ஜெயாவில்   செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.

இதில்   போலீஸ்   என்ன   சொல்கிறது   என்பது   முக்கியம்    என்று  ஜாஹிட்   கூறினார்.  அவர்கள்  விவாதத்தை  இரத்துச்   செய்ததற்கு   உண்மையான   காரணத்தை  வெளியில்   சொல்லாதிருக்கலாம்.

“அவர்களின்  முடிவையும்  பரிந்துரையையும்  மதிக்க   வேண்டும்”,  என்றார்.