அன்னிய முதலீட்டாளர்களை பயமுறுத்தி விரட்டுவது நாட்டுப்பற்றுள்ள செயல் அல்ல, அது தேசத் துரோகம் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார்.
“சிலர் கூறிக்கொள்கிறார்கள் நாட்டுப்பற்றின் காரணமாகத்தான் பிரதமரையும் நாட்டையும் குறைகூறுவதாக.
“அடோல்ப் ஹிட்லர்கூட நாட்டுப்பற்றுள்ளவர்தான். அந்த நாட்டுப்பற்றிலிருந்து உருவானதுதான் நாஸிஸம். அதனால் 100 மில்லியன் பேர் மாண்டனர். வரலாற்றாசிரியர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள்”, என சாலே அவரது வலைப்பதிவில் கூறினார்.
மில்லியன் ககணக்கில் மக்கள் மடிந்தால்தான் உண்மையான நாட்டு பற்று என்று கூறுகிறீரா சாலே சைட் கெருவாக்.