நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் (திருமணம் மற்றும் மண விலக்கு) (திருத்தங்கள்) மசோதா 2016 இரண்டாவது வாசிப்புக்கு தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் அச்சம் தெரிவித்துள்ளது.
சிறார்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று அம்மன்றம் வலியுறுத்தியுள்ளது.