ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவு பிகேஅருடன் உறவுகளை முற்றாக துண்டித்துக்கொள்ள ஏகமனதாக முடிவு செய்துள்ளது. நேற்று அதன் 45வது ஆண்டுக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதை உறுதிப்படுத்திய ஜோகூர் பாள் இளைஞர் துணைத் தலைவர் அஹமட் நப்வால் மாபோட்ஸ் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற அவசரத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் பாசிர் கூடாங் பேராளர் என்றார்.
பிகேஆருடன் ஒத்துழைப்பை முறித்துக் கொள்வதுடன் பிகேஆருக்கு “இரவல் கொடுக்கப்பட்ட” பத்து பகாட் நாடாளுமன்ற தொகுதியையும் பறித்துக் கொள்ள ஜோகூர் இளைஞர் பிரிவு தயாராக உள்ளதாகவும் அத்தீர்மானம் குறிப்பிடுகிறது.
“14வது பொதுத் தேர்தலில் ஜோகூரில் பாஸின் வெற்றியைப் பரவலாக்க ஜோகூர் இளைஞர் பிரிவு உறுதி பூண்டுள்ளது”, என நப்வால் கூறினார்.