எம்ஆர்டி-இன் இரண்டாம் கட்டம்- செமாந்தானிலிருந்து காஜாங் வரைக்குமான சேவை- ஜூலையில் முழுமையாக செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது கடந்த டிசம்பரில், சுங்கை பூலோ-விலிருந்து செமாந்தான் வரைக்கும் செயல்படத் தொடங்கிய முதல் கட்ட எம்ஆர்டி சேவையின் தொடர்ச்சியாக விளங்கும் என ரெபிட் ரெயில் சென். பெர்ஹாட் தலைமை செயல் அதிகாரி ஜொகாரி சுலைமான் கூறினார்.
“எங்கள் திட்டப்படி எம்ஆர்டி இரண்டாம் கட்டம் ஜூலையில் தொடங்க வேண்டும். அதில் செமாந்தானிலிருந்து காஜாங் செல்லும் பாதை திறக்கப்படும்”, என்றார்.