“கபாளி” இரண்டாம் பகுதியைப் படம்பிடிக்க மலேசியா வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு விடுத்துள்ள அழைப்பை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டிஏபி பிரதிநிதி ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
நஜிப் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேர்கொண்டிருந்தபோது அந்த அழைப்பை விடுத்தார்.
மலேசியாவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு மிகப் பெரிய வெற்றியைக் கண்ட இந்தப் படத்தால் விளைந்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்று ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கூறினார்.
“மாறாக, அரசாங்கம் உள்நாட்டு இந்திய இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் உதவி உள்நாட்டு இந்திய திரைப்படத்துறையை ஊக்குவிக்க வேண்டும்.
“உள்நாட்டில் இந்தியப் படத் தயாரிப்புக்கு ஆதரவு கொடுங்கள். அது மலேசியரிடையே ஒற்றுமை, பணிவன்பு, பண்பாட்டுப் பல்வகைமை, மூத்தோரை மதித்தல் முதலிய பண்புகளை வளர்க்கும்”, என ராயர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“கபாளி” கலாச்சாரம் என்ற ஒன்று பள்ளிகளில் குறிப்பாக இந்திய மாணவரிடையே பரவியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதன் காரணமாகத்தான் 04, 24, 08, 36 குண்டர் கும்பல்களில் சேரும் போக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் கிள்ளானில் ஒரு பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் “கபாளி” கலாச்சாரத்தின் வெளிப்பாடுதான் என ராயர் குறிப்பிட்டார்.
கபாலி தக்காளி படத்தை ஸ்ரீ அண்டாலஸ் கிள்ளான் மற்றும் பூச்சோங் பள்ளிகளில் தாராளமாய் ஷூட்டிங் பண்ணலாம்.
உங்களுக்கு கபாலியை பிடிக்காத காரணத்தால் நீங்கள் கபாளி மேல் அபாண்டமாக பழி சுமத்துவது தவறு ராயரே.
ராயர் , ஒரு வேலை கபாலி படத்துக்கு அனுமதியை மறுக்கப்பட்டிருந்தால் , நீ அதுக்கு வேறு கதை ஏதாவது சொல்லியிருப்பாய் . நான் தெரியாமல்தான் கேட்கிறேன் கபாலி திரைப்படத்துக்கு பிறகுதான் நம் நாட்டில் குண்டர் கும்பல் வளர்ந்ததா ? கபாலி திரைப்படத்துக்கு துணை நடிகர்கள் அதிகமானோர் மலேசியர்கள் . அது சந்தோஷமே … மலேசியாவில் சொந்த தமிழ் திரைப்படம் தயாரித்தார்கள் தானே .. நீ போய் தியேட்டரில் பார்த்தாயா ? ஏத்தனை மலேசிய தமிழ் படத்தை நீ தியேட்டரில் சென்று பார்த்தாய் ?
நாட்டின் பிரதமரே ஒரு தமிழ் பட நடிகனை மதித்து அவர் நாட்டிற்கே சென்று அவர் வீட்டில் தேனீர் அருந்தி விட்டு வந்து , அவரை மீண்டும் நமது நாட்டிற்கு வரும் படி அழைப்பு விடுத்து வந்ததற்கு இவனுக்கு ஏனைய வயித்தெரிச்சல் ! எது நடந்தாலும் அதில் ஒரு குறை காண்பது இவனுக்கெல்லாம் ஒரு பொழப்பு ! இங்கு உள்ள அரசியல் வாதிகளை கேளுங்கள் எப்படி குண்டர் கும்பல்கல் ஆரம்பமாகியது என்று ! திரைப்படம் நல்லதையும் சொல்கிறது அவையெல்லாம் நமது மண்டையில் ஏறதோ !! உமது கட்சியில் நாலு காசு சம்பாதிக்க வழியை பாரு ஐயா ராயப்பரே !!
இந்த கபோதி படத்துக்கு அப்புறம் தான் – மன்னிக்கவும் இந்த கபாலி படத்துக்கு அப்புறம் தான் இங்கே – நம் இளையோரிடையே கும்பல் குண்டர் வளர்ந்தது என்பது அபாண்டம். ஆனால் ஆங்காங்கே சிறிய அளவில் நடந்து கொண்டிருந்த குண்டர் கும்பல் ‘தளபதி’ மற்றும் ‘அமரன்’ படங்களுக்குப் பிறகு துளிர் விட்டுத் தலை விரித் தாடி இப்போது பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. குண்டர் கும்பலில் ஈடுபட்டவர்கள் என்று கையும் களவுமாகப் பிடித்துவிட்டால் அவர்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. காட்டுப் பக்கம் கொண்டுபோய் மாறு கை மாறு கால் வாங்கி விட்டு அப்படியே விட்டு விட்டு வந்துவிட வேண்டும். ஒருவேளை அவன் உயிர் பிழைத்து மறுபடிம் வந்தால் அவனுக்கு நேர்ந்த கதியை அவனது மக்களுக்கும் ‘நண்பர்’களுக்கும் சொல்வானல்லவா? நான் சொல்வது ஒருவனை அல்ல. பிடிபடும் அத்தனை பேரையும் இப்படிச் செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. யாரெல்லாம் இதை ஆதரிக்கிறீர்கள். கயை உயர்த்துங்கள் பார்ப்போம்…
குடியானவன் குடித்துவிட்டு பேசுகிறான் .
இந்நாட்டின் இந்தியர்களிடையே குண்டர் கலாச்சாரம் வளர்வதற்கு காரணகர்த்தாவே காக்கா மகாதீர்தான் என்பதை சாதுர்யமாக மறைத்து, தமிழ் சினிமா மீது திணிப்பதில் இந்நாட்டின் இந்திய அரசியல் தலைவர்கள் ஆளும்கட்சியில் உள்ளவர்களும், எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் பலே கில்லாடிகள் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டனர்.
குண்டர் கலாச்சாரத்தை அதிகார பூர்வமாக கட்சிக்குள் கொண்டு வந்தவரே முன்னாள் தலைவர் தான். இப்போது அது கொடிகட்டிப் பறக்கிறது!
vtn=vin= குடியானவன் குடித்து விட்டுப் பேசுகிறான் என்று நீ சொல்வதால் நீயும் ஒரு குண்டல் கும்பல் தொண்டனா அல்லது குண்டனா?
ஒரு காலத்தில் சிங்கப்பூரில் குண்டர் கலாச்சாரம் தலை விரித்து ஆடியது -அதை அடக்கியது காலம் சென்ற லீ குவான் யு. என்ன லீ குவானுக்கு தன் நாடு முன்னேற வேண்டும் நல்ல நாடாக மக்கள் எல்லாரும் தங்களை சிங்கப்பூரர்கள் என்று என்ன வேண்டும் என்று உழைத்து சாதித்தும் காட்டினார். அந்த எண்ணம் இங்கு அறவே கிடையாது–அதுவும் இரண்டாவது பிரமனுக்கு பிறகு விஸ்வரூபம் எடுத்து மக்களின் ஒற்றுமையை குழைத்து சீரழித்து இன்றைய நிலையில் இருக்கிறோம். இவன்களுக்கு எல்லாமே இவன்களின் கையில் இருக்கவேண்டும் என்று அரைவேக்காடுகளை பதிவியில் ஏற்றி எல்லாவற்றையும் நாறடித்து விட்டனர்– நாம் எல்லாம் ஓரங்கட்டப்பட்டோம்.
சிங்கப்பூரால் முடியும் பொது நம்மாளும் முடியும் — ஆனால் நடக்காது–
தமிழ் நாட்டிலும் முடியும் ஆனால் நடக்காது. காரணம் சொல்ல தேவை இல்லை. எல்லாமே அப்பட்டம்.