பாஸ் பேராளர் ஒருவர் தம் கட்சியினர் இதர இனங்களையும் சமயங்களையும் இடித்துரைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கூட்டரசு அரசமைப்பு மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாத்துக்கும் தனி இடம் அளித்திருப்பது உண்மைதான் என்றுரைத்த நெகிரி செம்பிலான் பேராளர் அபு ஸரிம் அப்துல் ரஹ்மான், அதை வைத்து மற்றவர்களைத் தாக்கிப் பேசுவது முறையல்ல என்றார்.
“அது இந்நாட்டில் உள்ள மற்ற இனங்களையும் சமயங்களையும் தாக்கிப் பேசுவதற்கு அளிக்கப்பட்ட உரிமம் அன்று”, என அபு ஸரிம் கெடா, அலோர் ஸ்டாரில் பாஸ் முக்தாமாரில் கூறினார்.
“கோபத்துக்கு இடமளித்து இன உணர்வுகளைத் தூண்டி விடுவதற்கு மாறாக, அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டிப்பதற்குக் கட்சியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
“மற்ற இனங்களையோ சமயங்களையோ குற்றஞ்சொல்வது அவசியமற்றது”, என்றார்.
பாஸ் கட்சியில் நிறைய பேர் விஷயமறிந்த அரசியல் ஞானம் உள்ளவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
சரியாகச் சொன்னீர், அபு சரீம்! பாராட்டுகிறேன்! மலாய்க்காரர் மட்டும் அல்ல நேற்று மதம் மாறினானே அப்துல்லா அவன் கூட தன்னை மலாய்க்காரன் என்று நினைத்து கொண்டு பேசுகிறான்! உடலைத் தான் வளர்க்கிறார்கள்; மூளையைச் சுருக்குகிறார்கள்!
இத்தனை ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் ஞானோதயம் பிறந்திருக்கிறதா? போங்க டா வெங்காயங்களா இதை எல்லாமே ஆரம்பித்தது நீங்களும் தானே? சுதந்திரத்திற்கு முன்பு எல்லோரும் அண்ணன் தம்பி -இப்போது வந்தேறிகள் – KAFIR -இன்னும் எவ்வளவோ.