பிரதமர் நஜிப்பால் அறிவிக்கப்பட்ட மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தின் ஓர் அங்கமாக ஆவணங்கள் இல்லாத இந்தியர்களை நாடு தழுவிய அளவில் பதிவு செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.
இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவாக நாடு தழுவிய அளவில் 23 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அது முதலில் சிலாங்கூர் மாநிலத்தில் ஜூலை 3 இல் தொடங்கி மாதம் முழுவதும் நடைபெறும் என்று மஇகா தலைவர் எஸ். சுப்ரமணியம் கூறியதாக நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நடவடிக்கையில் குடியுரிமை இல்லாதவர்கள், தாமதமாகப் பிறப்பு பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆகிய அனைவரையும் பதிவு செய்வோம் என்றும் அவர் கூறினாராம்.
“கடந்த காலத்தில் எங்களிடம் பதிவு செய்திருந்தவர்களின் பிரச்சனைகளையும் தீர்க்கும் நோக்கத்தைகூட நாங்கள் கொண்டிருக்கிறோம்”, என்று அமைச்சர் தெரிவித்ததாக என்எஸ்டி செய்தி கூறுகிறது.
துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அஹமட் ஸாகிட் ஹமிடி இதற்காக அவரது அமைச்சியிலிருக்கும் அதிகாரிகள் உள்ளடங்கிய ஒரு குழுவை அமைத்து உதவ முன்வந்துள்ளதாகவும் சுப்ரமணியம் கூறினார்.
இந்நாட்டில் 200,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதாக சிலர் கூறிக்கொள்வதை சுப்ரமணியம் மறுத்ததாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 12,000 பேர்தான் பதிவு செய்துகொள்ள வந்தனர். ஆகவே, அவர்கள் கூறிக்கொள்வது போல பதிவு செய்யப்பட வேண்டியவர்கள் அதிகமாக இருக்கிறார்களா என்பது இந்த நடவடிக்கையின் மூலம் ஜூலையில் தெரிந்துவிடும் என்றாரவர்.
கடந்த காலத்தில் மைடாப்டார் மூலம் மஇகா பதிவு செய்திருந்த 12, 726 பேரில் 7,126 பேருக்கு உதவியுள்ளோம். நிராகரிக்கப்பட்ட 626 மனுக்கள் மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது என்று சுப்ரமணியம் தெரிவித்தார்.
நாடகம் அரங்கேறுகிறது.
நல்லது நடக்கட்டும் ! நம்மவர்களும் இதற்கு தயராக வேண்டும் ! எனோ , தானோ , என்று இருந்தால் அரசாங்கம் என்ன செய்யும் ! உங்கள் வீட்டு அடுப்பங்கரைக்கு வந்து உங்களுக்கு பொங்கி போடுவது தான் அவர்கள் வேலையா ! நாம் தான் முயற்சிக்க வேண்டும் ! ஒழுக்கமான வாழ்க்கை மிகவும் முக்கியம் ! பங்களாவுக்கும் ! இந்தோனுக்கும் பிள்ளை பெத்து வீட்டு பிறப்பு பத்திரம் இல்லை என்று புலம்பி கொண்டு அரசாங்கத்தை குற்றம் சொல்லி ஆகப்போவது ஏதுமில்லை !!
60 ஆண்டுகள் ஒன்றும் புடுங்க முடியவில்லை இப்போது திடீர் என்று சாதிக்கப்போகின்றனர். பெரும்பாலான நம் “குடி” மக்கள் இவ்வளவு மூடர்கள் என்று எண்ணும்போது கேவலமாக இருக்கின்றது. தங்களின் குழந்தைகளுக்கு பிறப்பு பத்திரம் தங்கள் திருமண பத்திரங்கள் மற்றும் தேவையான பத்திரங்களை பற்றி கவலை படாமல் கண்களை மூடிக்கொண்டிருந்து விட்டு இப்போது தங்களின் வாழ்க்கையே நடுத்தெருவில் வரும்நிலையில் ஆ ஊ என்று சத்தமிட்டால் அம்னோ காரனுக்கு என்ன வேர்த்தா வடியுது? எனினும் பங்களா இன்தோக்களுக்கு வாரி வழங்கும் இந்த நாதாரிகள் இங்கு பிறந்தவர்களுக்கு ஏன் கொடுக்க முடியாது என்பதே கேள்வி. MIC துரோகிகள் தங்களின் கடமையை ஒழுங்காக செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?
s .maniam கூறியவை,மலேசிய இந்தியர்களுக்கான பொன்னான கருத்துக்கள்,
ஐயா s .maniam அவர்களே– நீங்கள் சொல்வது இன்றும் நடக்கிறதா? நம் பெண்கள் மதம் மாறி திருமணம் செய்து பிள்ளை பெற்றார்களா? இல்லை …………….? மேற்கு நாடுகளில் நடப்பது ஏற்று கொள்ளப்படும் ஆனால் இங்கு? நம்மவர்கள் அவ்வளவு மழுங்கியா?
பதிவு செய்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆவணங்களைக் கொடுத்து அவர்களும் இந்நாட்டு குடிமக்கள் என்னும் உரிமையை கொடுத்து வருகின்ற பொதுத் தேர்தலில் அவர்கள் வாக்களிக்கும் உரிமையைக் கொடுத்தால் நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன் இது சத்தியம்!
அந்த இருவருக்கும் வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று கூறப்பட்ட ஆரூடம் குளிர் காய்ச்சல் வர வைத்து விட்டது என்று புரிகிறது.
முதலில் , இந்தியர்களுக்கு மலேஷியா அடையாள அட்டை எப்பொழுது தரப்படுகிறது என்றால் : மலேஷியா பெரும் அளவில் பொருளாதார சுமையை தாங்கும் பொழுதுதான் தரப்படுகிறது … சரி நான் ஒன்று கேட்க்கிறேன் அதற்கு பதில் சொல்லுங்கள் அறிவு ஜீவிகளா …. அடையாள அட்டை தந்த அடுத்த 10 வருடத்தில் ஒரு நாடு திவாலாகிறது அல்லது பெரும் கடன் சுமையை எதிர்கொள்கிறது . அப்படி இருக்கும் பட்சத்தில் தனிமனித கடனில் நீங்களும் சேர்ந்து கொள்வீர்களா ? வாழும் பொழுது அதன் வளங்களை அனுபவிக்க முடியவில்லை ஆனால் மடியும் பொழுது சிலுவையை சுமக்க வேண்டுமா ? யோசிக்கவே மாட்டிடீர்களா ? உங்கள் மண்ணாங்கட்டி மூளையுடன்தான் வாழ்வீர்களா ? அரசியல் வாதிகள் தங்களின் வாரிசுகளை வேறுநாடுகளில் குடி பெயர்ப்பது உங்கள் கண்களுக்கு அகப்படாதா ? ஆனந்த கிருஷ்ணன் ஆஸ்திரேலிய குடிபெயர்ந்து விடடார். MCA மகளிர் அணி தலைவி பிள்ளைகளுக்கு ஆஸ்திரேலிய PR வாங்கி கொடுத்து , காப்பன்றி விடடார். காலம் முழுதும் அடிமைகளாக கிடைப்பதற்கு என்ன ஒரு ஆசை இவர்களுக்கு !!
மதம் மாரி பெற்றுக்கொள்ளவில்லை நண்பரே ! காமத்திற்கும் ! காசுக்கும் அடிமையாகி பெற்றுக்கொள்கிறார்கள் ! சமீபத்தில் ஒரு செய்தி வந்ததே ! ஒரு தமிழன் தனது மூன்று பிள்ளைகளுக்கும் பிறப்பு பத்திரம் எடுக்க முடியாமல் தவிக்கிறார் என்று ! இறுதியில் தெரியவந்தது ! அவர் இந்தோனேசியா பெண்ணுடன் கள்ளத்தனமாக வாழ்த்திருக்கிறான் ! தோட்டத்தில் தமிழன் கல்வி அறிவின்றி ! வாழ்த்தபோதெல்லாம் இந்த பிரச்னை கிடையாது ! பண்பான வாழ்கை வாழ்ந்ததோடு ! ஆறு ,ஏழு பிள்ளைகள் பெற்று அவர்களையும் நன்றாக படிக்கவும் வைத்தான் ! உயர் பதவிகளை வகிக்கும் நம்மவர்கள் பெரும்பாலும் தோட்டத்தில் தமிழ் பண்போடு வாழ்ந்த நம்மவர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர்களாக தான் இருக்கிறார்கள் !
ஐயா திலீப் , இங்கு நாம் புலம்பி கொண்டிருப்பது படிப்பறிவும் ! பிழைக்க வழிதெரியாத ! குப்பனையும் ! சுப்பனையும் ! பட்றி ! சோத்துக்கு வழியில்லாதவனிடம் ! நாட்டின் பொருளாதாரத்தை பட்றி பேசினால் அவனுக்கு என்னைய தெரியும் ! அரசியல் வாதிகள் அறிக்கை விடுவதோடு சரி ! நாமெல்லாம் விவாதிப்பதோடு சரி ! putra jaya எங்கிருக்கிறது என்று தெரியாதவனுக்கு ! அவர்களின் கதவு 10 ஆண்டுகளாக திறந்திருக்கிறதாம் ! இவர்கள் தான் போக மாடேன் என்கிறார்களாம் ! MIC காரன் வசனம் பேசுகிறான் ! நாம் பொதுவாக தகவல் தெரியாத சமுதாயம் !! பாவம் நமது பாமர மக்கள் கை பிடித்து வலி நடத்தி கொண்டு போக வேண்டியவர்கள் !!!
சூ… சூ… சூப்பி(டு)மணி ஆவணங்கள் இல்லாத இந்தியர்களை அரசாங்கம் பதிவு செய்து சூப்பிக்கொண்டிருக்க போகிறீர்கள் என்பதை இந்தியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
நீங்க புதுசா பிலிம் காட்ட வேண்டாம்.
ஆமாய்யா … ஊரை ஏமாத்துண்ண துன் சம்பந்தனையும் மா இ கா வையும் விட்டுருங்க …. என்னை துப்புங்க ஏன்னா நான் உண்மையை பேசறன்ல … அதனால ! 1957 லில் இருந்து 1970 வரைக்கும் தர பட்ட குடியுரிமையை ரத்து பண்ணுங்கன்னு ஒருத்தன் சொல்றான், மா இ கா கூடிக்கொடுக்கிறான், அவனை விட்டுருங்க … என்னை துப்புங்க ஏன்னா நான் உண்மையா பேசறன்ல … அடேய் மட பயலுங்களா .. 2012 வரை 50 ,000 வரை மலேஷியா இந்தியர்கள் OVERSEA CITIZENSHIP OF INDIA எடுத்து வச்சிருக்காங்களே , ஏன் என்று எத்தனை பேருக்கு தெரியும் ? அட மட பய மக்கா … அடுத்து வரும் ஆண்டுகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் …. 30 லட்சம் இந்தியர்கள் இருக்கும் மலேசிய நாட்டில் , 45 லட்சம் அந்நிய தொழிலாளர்கள் இருக்கிறார்களே , எதற்கு ? ஏன் நம் இந்திய இளைஞருக்கு வாய்ப்புக்கள் தருவதில்லை ? மேலும் அந்நிய நாட்டு ஆடவன் , எப்படி பெண் துணை இல்லாமல் 10 ஆண்டு வாழ்வான் ? இங்கே இருக்கும் 50 , 000 மணவிலக்கு பெற்ற இந்திய பெண்கள் , சந்யாசிகள் ஆகி விடுவார்களா ? இல்லை வேறு துணை தேடுவார்களா ? 150 , 000 இந்திய குழந்தைகள் அப்பா இல்லாமல் வாழப்போகிறார்களே, அடுத்த 20 வருடம், யார் காப்பாத்துவா ? மட பயலுங்க ……. மட பயலுங்க …….
காலதாமதம் ஆனா நீதியும் , தரப்படாத நீதியும் ஒன்று !
நாம் கேவலமானவர்கள் – இவ்வளவு மடையர்களா நம்மவர்கள்? நினைக்கவே எரிகிறது– கருத்தடை என்று ஒன்று இருக்கிறதே அது கூடவா தெரியாது? அக்குழந்தைகளின் வருங்கால வாழ்வு? ஈன ஜென்மங்கள். இந்த ஈனங்களின் பாபத்தை பிள்ளைகள் சுமக்க வேண்டுமா?
என் தந்தையார் , தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சிக்காக தோட்டங்களில் மாதம் மாதம் பத்து வெள்ளி என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதை ஒட்டிய நாடகங்களில் நடித்ததோடு , எதிர்பாளர்களான தொழிற்சங்க வாதிகளின் அடியாட்களிடம் காண்ட கம்பில் அடி வாங்கிய காலத்தில் துன் சம்பந்தன் அவர்களிடம் நெருங்கி பழகியபோது , துன் அவர்களின் சமுதாய பற்றுதலையும் அவரின் சமுதாய அக்கறையையும் நேரில் பார்த்தும் கேட்டும் இருக்கிறேன் ! ஊரை ஏமாத்தின துன் சம்பந்தன் என்று திலீப் அவர்கள் குறிப்பிடுவது வேதனை அளிக்கிறது !! எந்த வகையில் சம்பந்தன் ஊரையும் இந்த சமுதாயத்தையும் ஏமாத்தினார் என்று விளக்கினால் எண்ணம் தெளிவடையும் ! உயர்வான எண்ணம் கொட்டவர்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் !!
ஐயா s .மணியம் அவர்களே , எனக்கும் துன் சம்பந்தனுக்கு தனி பட்ட விரோதம் என்று எதுவும் இல்லை ! என் கோபமெல்லாம் யாதெனில் : அன்றைக்கு பிரிட்டன் சென்ற சீனர்களின் பிரதிநிதி தான் சென் லோக் , இந்தியர்களின் பிரதிநிதி சம்பந்தன் ஏன் மூவினத்தவர்களுக்கும் சரி சமமான குடியுரிமை பெறவில்லை ? 1964 சிங்கப்பூர் பிரிந்தவுடன், பிரிட்டனின் மலேசிய ஒப்பந்தம் பயன்னற்றதாய் ஆனது ! துன் சம்பந்தன் , இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைக்கு அப்பொழுது என்ன கிழித்தார் ? 1944 ஆம் ஆண்டுகளில் , பிரிட்டனை எதிர்த்த வீரசேனன் மற்றும் கணபதி என்பவர்களாலேயே dataran abdul samad (இன்று dataran merdeka ) வில் 1 லட்சம் இந்தியர்களை சேர்த்து , தோட்ட துண்டாடலை புரிய வைத்தனர் …. பிறகே தமிழனை காப்பாத்துறேன் பேர்விழி என்றார் துன் சம்பந்தன் … பிறகு என்ன ? வசூலிக்க பட்ட பணத்தில் , தலைவன் அவனை காப்பாதிரி கொள்வான் ! சாமி வேலுவை போல ! வெல்லம் திங்கறவன் ஒருத்தன் வெரலு சுப்புரவன் இன்னோருத்தனா ? விஷயம் தெரியாம அவன் சொல்றான் இவன் சொல்றான்னு சொல்லக்கூடாது ……
ஐயா s .மணியம் அவர்களே, ‘சிங்கம்’ போல உங்கள் கர்ஜனை நாடு முழுக்க ஒலித்தது. அதைக் கேட்டு ‘தூங்கிக்’ கொண்டிருந்த நான் கூட விழித்துக் கொண்டேன்.
யார் சொன்னது பெரியவர் துன் சம்பந்தன் நமக்கு எதுவும் செய்யவில்லை என்று? அன்று அவர் துங்குவுடன் நம்மைப் பிரதிநிதித்து சுதந்திர சாசனத்தில் கையெழுத்திடச் சென்று விட்டு பின் அங்கே ‘மன’ மாறி வெறும் சாட்சியாக மட்டும் கையெழுத்திட்ட பலனை நம் இனம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறதே…துன் சம்பந்தனை குறை சொல்லலாமா?
அன்று அவர் அப்படி கோமாளித்தனமாக நடந்து கொண்டதால் நமக்கு உரிய 10% விழுக்காடு எதிலாவது குறைக்கப்பட்டதா? வேலை வாய்ப்பில் 10%, கல்விக்கூடங்களில் 10%, உயர்கல்விக் கூடங்களில் 10% என்று இன்றுவரை ‘நிலைநாட்டப்பட்டு’ வருவதற்கு காரணம் துன் சம்பந்தன் தானே? இப்படி இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். அப்பேர்பட்ட அவரை நாம் குறை கூறலாமா?
ரொம்ப வேணாங்க. பத்துப் பத்தாக முனுசாமியும் முனியாண்டியும் கொடுத்த பணம் தானே இன்றும் அந்த கட்டடமாக ‘ஒசந்து’ நிற்கிறது. சுப்பனும் குப்பனும் கொடுத்த பணம் தானே இன்று பல (மன்னிக்கவும், ‘சில’) தோட்டங்களாக உருவெடுத்துள்ளன?
அந்த விஸ்மா சம்பந்தனில் போய்ப்பாருங்கள். தே.நி.நி.கூ. சங்க அலுவலகத்தில் பத்துப் பத்தாக கொடுத்த முனுசாமி மகனும் முனியாண்டி மகனும் தான் இயக்குனர் முதல் கடை நிலை ஊழியன் வரை வேலை பார்க்கிறார்கள். சுப்பனும் குப்பனும் பத்துப் பத்தாக போட்டு சேர்ந்தது தான் இத்தனை சொத்துக்களும், இயக்குனர்களும் அங்கே வேலை செய்வோரும் வாங்கும் பல்லாயிரக்கனக்கான மாதாந்தர ஊதியம், அவர்கள் உபயோகிக்கும் சொகுசு கார், பங்களா வாசம் உட்பட. ஆனால் இன்று அந்த சுப்பனும் குப்பனும் முனுசாமியும் முனியாண்டியும் போய் தங்கள் பங்கை விற்று பணத்தைத் திரும்பக் கேட்டால் என்ன தரவேண்டும்? அவர்கள் என்ன தருகிறார்கள்? இதுவாவது உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் அன்று நெஞ்சு எலும்பு ‘ஒடிய’ ஏணிப்போட்டு ஏறி பால் மரம் வெட்டியும், செம்பனைக் குலை வெட்டியும் கொடுத்த ‘பத்து’க்கு என்ன பலன்? இன்று வேண்டுமானால் பத்து வெறும் பத்து தானே என்று இருக்கலாம். ஆனால் மாதம் 40- வெள்ளியும், 50- வெள்ளியும் சம்பளமாகப் பெற்ற அந்தத் தொகையில் கொடுத்த பத்து வெறும் பத்து அல்ல. அன்று றந்த பத்து அவர்களின் சம்பளத்தில் நாலில் ஒரு பங்கும் ஐந்தில் ஒரு பங்கும் ஆகும் இன்னும் புரியவில்லை என்றால் இன்று உங்களின் மாதச் சம்பளத்தில் நாலில் ஒரு பங்கை அல்லது ஐந்தில் ஒரு பங்கை யாருக்காவது ‘தாரை’ வார்த்து விட்டு மீதப் பணத்தில் குடும்பம் நடத்திப் பாருங்கள். அப்போது தெரியும் ‘அந்த’ பத்து எவ்வளவு பெரிசு என்று. மீண்டும் சொல்கிறேன். யார் சொன்னது ‘அவர்’ நம்மை ‘செய்யவில்லை’ என்று.
ஐயா உண்மை நிலவரங்களை விளக்கி எழுதும் போது புள்ளி விவரங்களும் ! சம்பவங்கள் நடந்த சூழ்நிலையும் ! காலமும் மிகவும் முக்கியம் ! சாமி வேலுவையும் ! துன் அவர்களையும் ஒப்பிடுவது ! ஒரு சமுதாய இழுக்கு என்று கருதுகிறேன் ! நமது நாட்டிற்கு ஒரு நாள் பிரதமராக வாய்ப்பு வழங்க பட்டவர் துன் அவர்கள் ! கோடீஸ்வரனாக பிறந்து மக்களுக்காக ஏதுமின்றி அனாதையாக இறந்தவர் துன் ! எனக்கு தெரிந்த விவரம் ! அவன் சொல்வதையும் ! இவன் சொல்வதையும் சொல்லவில்லை என் தந்தையருடனும் ! அவரின் கூட்டுறவு தொண்டர்களுடனும் என் கண் முன் நடந்த செயல் திட்டங்களின் விவாதங்களை இளைய வயதில் நேரில் பார்த்ததை சொல்கிறேன் !
மணியம் சார்! நாம் துன் சம்பந்தனை நல்ல மனிதர் என்கிறோம். இனப்பற்று உள்ளவர் என்கிறோம். திலீப் 2 அவர்கள் அவர் சரியானத் தலைவர் இல்லை என்கிறார். அது தான் வித்தியாசம்! சம்பந்தன் காலத்தில் திலீப் போன்ற தலைவர்கள் இல்லாதது இந்த சமுதாயத்திற்கு பெரிய இழப்பு!
s.maniam சொல்வதில் உண்மை இல்லாமலில்லை, அதேவேளை, திலீப், குடியானவன் போன்றோர் கருத்துக்களும் சிந்திக்க தக்கவையே. ஆனாலும் இப்போது இதையெல்லாம் விவாதிப்பதால் எந்தப் பலனும் விளைய போவதில்லை. அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து கருத்துக் கூறுவது பயனாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
உண்மை சுடும். இன்னும் கிண்டினால் மேலிருந்து கீழ் வரை…உள்ளிருந்து வெளிவரை எரியவும் கூடும்..
துன் சம்பந்தன் காலத்தில் திலீப் போன்ற தலைவர்கள் இல்லாமையால் நமது சமுதாயம் அனைத்தையும் இழந்து நிற்கிறது ! துன் சம்பந்தன் தூர நோக்கு சிந்தனை இல்லாத தலைவர் ! திலீப் போன்ற தலைவர்கள் இப்போது இருக்கிறார்கள் தானே இந்த சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள் ! வாழ்த்துக்கள் !!
துன் சம்பந்தனையும் சாமிவேலுவையும் ஒன்றாக பார்க்காதீர்கள் என்று வாதிடும் நண்பர்களே , சாமி வேலுவும் ஒரு குறிப்பிடட காலங்களில் அவர் சார்ந்த ஜாலராக்களை வாழவைத்து தான் சென்றார் . அதனால் அவர் ஜால்ராக்கள் சாமிவேலுவை புகழ்வர், இருப்பினும் ஒரு இனத்தின் எதிர்காலங்களை கருத்தில் கொள்ளும் பொழுது , பாரபட்சம் பார்க்க இயலாது ! துன் சம்பந்தன் துரோகத்தை கண்டு கொள்ளவில்லை , சாமி வேலு துரோகத்திற்கு துணை நின்றார் ! என் பார்வையில் இரண்டும் ஒன்றே ! இலங்கையில் , சிங்களவர்களின் பாரபட்சத்தை எதிர்த்த தந்தை செல்வநாயகம் , 8 பார்லிமென் மெம்பர்களையும் பதவி விலக சொல்லி , 60 களில் ஜனநாயக புரட்சி செய்தார் . எனவே புரிதல் உண்டாயிட்ட்று ! துன் சம்பந்தன் அப்படி செய்ய வில்லையே ! “திலீப் போன்ற தலைவர்கள் இப்போது இருக்கிறார்கள் தானே இந்த சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள் !” என்று கூறும் s . maniam அவர்களே , HINDRAF உதயகுமார் அவர்கள் ஒரு இன அழிப்பை சுட்டி காட்டியதன் விளைவாக 30 மாத சிறைத்தண்டனை அனுபவித்தாரே, எத்தனை தமிழர்கள் அவரை சென்று கண்டோம் ? எனவே , இந்திய சமுதாயம் மலேசியாவில் எல்லாம் அரசியல் சார்ந்த வாழ்வியல் என்று உணராதவரை , HINDRAF உதயகுமார் போன்றார் 100 தோன்றினாலும் , தூரநோக்கு சிந்தனை யில்லாமல்தான் வாழ்வோம். செத்தாழும் ஹீரோவா சாகனும் !நேதாஜி சுபாஷ் சந்திர போஸை போல ! HINDRAF உதயகுமார் போல …. இல்லைனா ரொம்பகாலம் வாழ்ந்து, நாமே வில்லனா மாற்ரத நாமளே பார்க்க நேரிடும் !
” WHEN THE ROOTS ARE DEEP , THERE IS NO REASON TO FEAR THE WIND ” நாம் இந்த நாட்டில் கல்வி ,பொருளாதாரம் , ஆன்மிகம் , பண்பாடு , அரசியல் , மக்கள் தொகை என்று எல்லாதுறைகளிலும் ஆழமாக வேர் ஊன்றி இருந்தால் நமக்கு நமது சமுதாயத்திற்கு இன்று ஏற்பட்டிருக்கும் அவலம் வந்திருக்காது ! வேர்கள் ஆழமாக இருந்தால் காற்றுக்கு நாம் பயப்பட வேண்டியதில்லை ! விதை நல்லதாக இருந்தாலும் நல்ல நிலத்தில் விதைத்தால் தான் மரம் வேர் ஊன்றி கிளைகள் பரப்பி மக்களுக்கு உணவாகவும் , நிழலாகவும் பயன் படும் ,பாறையில் விதைத்த விதையால் எந்த பயனும் கிடையாது ! நல்ல எண்ணமும் ,உயரிய நோக்கமும் கொண்ட ஒரு நல்ல மனிதர் துன் சம்பந்தன் அவர்களால் , கூட்டுறவு என்ற விதை தோட்ட மக்கள் என்ற நல்ல மண்ணில் , ” குருவிக்கும் கூடு உண்டு ,நமக்கு ஒரு வீடில்லை ” என்ற தாரக மந்திரத்தோடு விதைக்கப்பட்டது . 10 வெள்ளி , மாதம் மாதம் 10 வெள்ளி என்ற சுலோகத்தோடு , ஏழை மக்களால் உருவாக்கப்பட்டது ! இன்று ஆலமரமென உருவெடுத்து பலருக்கு வாழ்வளித்த கொண்டிருக்கிறது ! பொது இயக்கம் என்றால் பல குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும் ! அதை தட்டி கேட்டு மக்களுக்காக குரல் கொடுப்பவன் தான் உண்மையான சமுதாய தொண்டன் ! ஏமாற்றுவதும் குற்றம் ! ஏமாறுவதும் குற்றம் ! உரிமைகளுக்கு போராட தெரியாத ! நம்மை ஏமாற்றும் கள்ளர்களிடம் நமது வீரத்தை வெளிப்படுத்த தெரியாத கோழைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ! கூட்டுறவின் சிப்பாங் வேலி தோட்டத்தின் அவலத்தை நேரில் கண்டு ! ” சொந்த தோட்டத்தில் மக்கள் சொந்த வீடு என்று சொல்லி மாட்டு தொழுவங்களில் வாழ்கிறார்கள் ” என்று ! அதிகுமணனின் வானம்பாடியில் கட்டுரை எழுதினேன் ! கூட்டுறவின் உயர் அதிகாரிகள் என்னை தேடி வந்து விளக்கம் கேட்டனர் !!!! உனக்கு சங்கத்தை பட்ட்றி எழுதுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்றனர் ! என் தந்தையின் பங்கு பணம் சங்கத்தில் இருக்கிறது அதற்கு நான் வாரிசு என்றதற்கு , உனக்கு ஏதுமில்லை என்றனர் ! 1000 வெள்ளிக்கு ( 80 பது கலில் ) பங்கு வாங்கி இன்றும் வைத்திருக்கிறேன் ! உரிமைக்காக முதலீடு அல்ல ! என் எழுத்து பிறகு கூட்டுறவு தோட்டங்களின் பாட்டாளிகளின் வீடுகளை புதுப்பிக்க உதவியது என்று பெருமை பட்டேன் ! ( இன்று சொந்த வீடுகளில் இருக்கிறார்கள் ) விதைப்பவனும் ! விளை நிலமும் சிறப்பானதக இருக்க வேண்டும் ! மைக்கா/ maika , என்ற விதை விதைத்தவனும் சரியில்லை ! பாறையில் விதைத்ததினால் பலன் இன்றி போனது ! ஹிண்ட்ராப் ( HINDRAF ) நோக்கம் நல்லதாக இருந்திருக்கலாம் ! சுயநல வாதிகளின் கூடாரமாக மாறியதால் ! மூன்று காட்சிகளாக மாறி சிதறி போய் கிடக்கிறது ! உதயகுமாரை ஓரங் கட்டி விட்டு அவர் சிறையிலுருப்பதை பொறுப்படுத்தாமல் ! பதவிக்கு தங்களை தயார் படுத்தி கொண்டவர்களை தண்டித்து இருக்கவேண்டும் , மக்களை குறை கூறுவதில் பயன் ஏதும் இல்லை !சந்தர்ப்ப வாதிகளை முதலில் கடுமையாக தண்டிக்க வேண்டும் ! மக்களை சூறையாடும் கள்ளர்களை முதலில் தண்டிக்க வேண்டும் ! நாங்கள் சொல்லும் நீதி , நேர்மை , நியாயம் எல்லாம் எடுபடாது ! திலீப் அவர்களின் வழியில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை போல ! துரோகிகளை கலை எடுக்க வேண்டும் ! வன்முறையில் இவர்களை திருத்த வேண்டும் , அப்போதுதான் சமுதாயத்தின் பெயரை சொல்லி அரசியலுக்கு வரும் இவர்கள் ! பயத்தோடும் ,மண சாட்சியோடும் சேவை செய்வார்கள் !