மே 11-இல், பூச்சோங், பண்டார் கின்ராரா சூதாட்ட மையத்தில் கொள்ளையடித்ததுடன் அங்கு பணி புரிந்த பெண்ணைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களில் ஒருவன் நேற்றிரவு கோலாலும்பூர் ஸ்ரீ செமராக் மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் 12வது மாடியிலிருந்து கீழே விழுந்து மாண்டான்.
இரவு மணி 10.10க்கு அவன் வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்ட போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் மெகாட் முகம்மட் அமினுடின் கூறினார்.
“போலீசார் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் சந்தேகப் பேர்வழி கதவைத் திறக்காததால் அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். உள்ளே அவ்வாடவன் போலீசாரிடமிருந்து தப்பிக்க ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் தொங்கி கொண்டிருந்தான்.
“சரணடையுமாறு அவனிடம் பலமுறை கூறியும் கேளாமல் அவன் மல் கீழே குதித்தான்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
கீழே விழுந்தவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு அவன் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
கற்பழிப்புக்காக கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்து தப்பி விடலாம் ஆனால் கொள்ளையடித்த சந்தேக பேர்வழி என்று போலீசுடன் சென்று போலீஸ் வளாகத்தில் மரணம் அடைவதைவிட மாடியிலிருந்து குதித்து மரணம் அடைவதே மேல் என்றுகூட நினைத்திருக்கலாம்.
நம் நாடு எங்கு போய்க் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. இங்கே கற்பழிப்பு என்பது பொழுது போக்காகிவிட்டது. சட்டமும் ஒழுங்கும் சீர்குழைந்துவிட்டது. ஒரு நாளைக்கு ஐந்து முறைகள் தொழுதும் நம்மை ஆண்டவன் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் போல் தெரிகிறது.