சரவாக்கின் புஜுட்டில் ஜூலை 4-இல் இடைத் தேர்தல் நடைபெறும்.
தேர்தல் ஆணையம் இதனை அறிவித்தது. வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் ஜூன் 20.
ஆஸ்திரேலிய குடியுரிமை வைத்திருந்ததற்காக டிஏபி-இன் டாக்டர் திங் தியோங் சூன் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழந்ததை அடுத்து புஜுட் தொகுதி காலியானது.
மே12-இல் அவரது தகுதியைப் பறிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது 82-உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 70 பேர் அதனை ஆதரித்தார்கள், பதின்மர் எதிர்த்தனர்.