பிகேஆர் இளைஞர் காங்கிரஸில் பேசிய ஒரு பிகேஆர் இளைஞர் பிரிவு பேராளர் நவீன தாலிபான்களிடமிருந்து கட்சி ஒதுங்கி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நாட்டு அரசியல் கட்சிகளில் இந்த தாலிபான்களைக் காணலாம் என்று பினாங்கு பேராளர் ஃபஹாமி ஸைனால் கூறினார்.
அவர்கள் தங்களுடைய சுயநலன்களுக்காக சமயத்தைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர்களுடைய பெயர்களைத் தாம் கூறப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
அக்கூட்டத்தில் பலர் கேட்டுக்கொண்ட போதிலும் அவர் பெயர்களை வெளியிடவில்லை.
ஆனால், அவர் சூசகமாக பாஸ் கட்சியைத்தான் குறிப்பிட்டார் என்று கருதப்படுகிறது.
ஃபஹாமி மட்டுமல்ல, அக்காங்கிரஸில் பேசிய பலரும் பாஸ் கட்சியைக் குறிவைத்தனர்.
பாஸ்- ல் மட்டும் தாலிபான்கள் இல்லை– எல்லா மலாய் முஸ்லீம் காட்சிகளில் இருக்கின்றனர்– சில கட்சியில் அதிகம் சில கட்சியில் குறைவு அவ்வளவு தான். ஒன்று மட்டும் நிச்சயம் இவன்களின் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது காரணம் இந்த நாட்டின் கல்வி முறை அத்துடன் மத பள்ளிகளில் நடக்கும் மதவெறி படிப்பினை. சிந்திக்கும் திறனை போதிப்பது இல்லை. என்று ஆங்கில பள்ளிகள் மலாய் பள்ளிகளாக்கப்பட்டனவோ அன்றே இன ஒற்றுமைக்கு சாவு மணி அடித்தாகி விட்டது. அதிலும் இன வெறியை தூண்டிவிட்டு குளிர் காயும் அரசியல் வாதிகள் வேறு. சாபா சரவாக்கில் நடக்கும் மதம் மாற்றும் வேலை வேறு.
உண்மையே நவீன தலிபான் Pa.. மற்றும் UMN… மவனுங்களே சாகிர் naik-kai ஆதரிக்கும் அனைவரையும்…..