நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்றால் அன்வார் இப்ராகிம்தான் பக்கத்தான் ஹராபான் தலைவர்கள் பெரும்பாலோரின் முதன்மைத் தேர்வு என்பது தெளிவாக தெரிகிறது.
இன்று ஷா ஆலமில், பிகேஆர் தேசிய காங்கிரசில் சுமார் ஆயிரம் பிகேஆர் பேராளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், பிகேஆர் தலைவர்கள் ‘அன்வார் 7வது பிரதமர்’ என்ற வாசகம் கொண்ட அறிவிப்பு அட்டைகளுடன் காணப்பட்டனர்.
முதல் வரிசையில் நின்றிருந்த பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் துணைத் தலைவர் அஸ்மின் அலி, உதவித் தலைவர்கள் ஆகியோர் கைகளில் அறிவிப்பு அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
அவர்களுடன் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்கும் பார்டி அமனா நெகரா (அமனா) தலைவர் முகம்மட் சாபுவும் சேர்ந்து கொண்டனர்.
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் தலைவர் முகைதின் யாசின் ஆகியோரும் கூட்டத்துக்கு வந்திருந்தனர். ஆனால், அவர்கள் கரங்களில் அறிவிப்பு அட்டைகள் இல்லை.
மகாதிர் கைபேசியில் கூட்டத்தைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். முகைதின் புன்னகையுடன் கைதட்டி பாராட்டினார். ஆனால், அறிவிப்பு அட்டை எதையும் வைத்திருக்கவில்லை.
ஹராபான் கூட்டணி தொடங்கப்பட்டதிலிருந்தே அன்வார்தான் பிரதமர் என்பது அதன் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. அது குறித்து எவரும் கேள்வி எழுப்பியதில்லை.
ஆனால், எதிரணிக் கூட்டணியில் பிறகு வந்து இணைந்த பெர்சத்துவின் விருப்பம் வேறு விதமாக உள்ளது. மகாதிர் அல்லது முகைதின் அடுத்த பிரதமராவதையே அது ஆதரிக்கிறது.
மகாதிரைப் பொருத்தவரை இப்போதைக்கு அது குறித்து விவாதிக்க வேண்டாம் என்கிறார். அது கூட்டணியில் சர்ச்சைக்கு இட்டுச் செல்லலாம் என்றவர் அஞ்சுகிறார்.
அன்வார் ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட முடியாது.
2020-இல் அவர் விடுதலை ஆவார். விடுதலை பெற்ற பின்னரும்கூட மேலும் ஐந்தண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருப்பார்.
எதிரணியினர் அன்வாருக்கு அரச மன்னிப்பைப் பெற முயற்சி செய்து வருகிறார்கள். அது கிடைக்குமானால் அவர் தேர்தலில் போட்டியிட முடியும்..
நேற்று பிகேஆர் இளைஞர் மாநாட்டில் அன்வார் விடுதலை ஆகி வரும்வரை வான் அசிசா பிரதமராக இருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
முழுக்க முழுக்க மலாய்க்காரன் பெயரை முன் நிறுத்தி கட்சியை அமைத்திருக்கும் – இந்திய சமுதாயத்தை பாழுங்கிணற்றில் தள்ளியவனையும், நான் முதலில் மலாய்க்காரன் பின்னர்தான் மலேசியன் என்று சொன்னவனையும் தவிர வேறு யார் எதிரணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக வேறு யார் நியமிக்கப்பட்டாலும் என்னைப் போன்ற சாமான்ய மக்களுக்கு சம்மதமே… வெற்றி நமதே…
சாதாரண முட்டாள்கள் அல்ல. அருமையான முட்டாள்கள் கூட்டம். மேலும் இன்னொரு ஐந்தாண்டுகளுக்கு அன்வாரை கம்பி எண்ண வைக்காமல் விடமாட்டார்கள் போல் தெரிகிறது. அரசியல் அறிவே இவர்களுக்கு கிடையாதா?
அன்வர் 14 வது தேர்தலுக்கு முன் வெளியாவது குதிரை கொம்பு. நம்பிக்கை நாயகன் ஆட்சி தொடரும்.