மலாய்க்காரர்கள் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசாவின் கொடிகள் மஇகா தலைமையகத்தின்முன் பறக்க விடப்பட்டன. அது மஇகாவிற்கு விடப்பட்ட ஓர் எச்சரிக்கையாகும்.
இந்த நடவடிக்கைக்குத் தலைமையேற்றிந்தவர் பெர்காசாவின் இளைஞர் தலைவர் அஸ்ருல் அக்மால் ஷஹாருடின்.
பறக்கவிடப்பட்டிருந்த அக்கொடிகளின் கீழ் நின்று கொண்டு அஸ்ருல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மஇகாவின் பொருளாளர் எஸ். வேள்பாரிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
பெர்காசா இளைஞர்கள் மஇகாவின் துடுக்குத்தனத்தை இனிமேலும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மஇகா போட்டியிடும் எந்த ஒரு தொகுதியிலும் மலாய் முஸ்லிம்கள் அதற்கு வாக்களிக்காமல் இருப்பதை பெர்காசா உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தில் மஇகாவின் நிலையை மறுபரிசீலனை செய்யுமாறு பிஎன்னை பெர்காசா இளைஞர் கேட்டுக்கொள்ளும், குறிப்பாக சட்டம் 355 மற்றும் ஸக்கீர் நாய்க் விவகாரத்தில் மஇகாவின் கர்வமான போக்கை கவனத்தில் கொள்ளப்படும் என்றாரவர்.
மஇகா போட்டியிடும் பல தொகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மலாய் வாக்காளர்கள் இருப்பதை அவர் நினைவுறுத்தினார்.
வேள்பாரியை கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று அஸ்ருல் மஇகா தலைவர் எஸ். சுப்ரமணியத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதோடு, “நெருப்புடன் விளையாட வேண்டாம்” என்று அவர் கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூறவேண்டும் என்று மேலும் கூறினார்.
பெர்காசாவால் பிரதிநிதிக்கப்படும் மலாய் முஸ்லிம்களால் பெரும் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
மானம்கெட்ட மா இ கா என்ன மணி ஆடி கொண்டிருக்கிறதா ?
டேய் இந்த குண்டர் தனத்தை எங்க கிட்ட காட்டாதீங்க . எங்கள் தலைவர்கள் எல்லாம் பள்ளிக்கூடத்திலேயே குண்டர் தனத்தை வளக்கிறவுங்க. பெர்காசாகாரனுங்களுக்கு எங்கள் தலைவர் விக்கிய பற்றியோ, சரோஜா பாலனையோ அல்லது பூச்சோங் மோகனை பற்றியோ சரியா தெரியாம, ஆடறீங்க
இந்த அமைப்பிற்கு ம இ கா என்ன பதிலை வைத்துள்ளது? திரு வேள்பாரி ம இ கா ஆண்மகனாக கூறிய கருத்தில் எந்த வித தவறும் இருப்பதாக தெரியவில்லை . தலைவர் திரு பாராசூட் மானியம் என்ன முடிவு எடுத்துள்ளார் ? பெர்காசா அமைப்பிற்கு பதிலடி கொடுப்பாரா ? அல்லது ஹி ஹி ஹி எனக்கு உக்கார நாற்காலி வேண்டும் என மௌனத்தில் இருப்பாரா ?
மலேசிய இந்தியஇழிஇன காவாலிகளே (மஇகா)
“நெருப்புடன் விளையாட வேண்டாம்” என்று உங்களை எச்சரிக்கும் பெர்காசாவை நோக்கி
“சிங்கத்தை சீண்டாதே சிதைத்து விடுவோம் பெர்காசாவை”
என்று பதிலடி கொடுக்க தைரியம் இருக்காடா ?
தைரியம் இல்லையென்றால் பெர்காசாவை வளர்த்துவிடும் அம்னோ தலைவர் ந.. மாலைநேரம் தொடங்கி மறுநாள் காலைவரை கைலிதான் அணிவாராம் அந்த கைலிக்குள் புகுந்து கொண்டு அடைக்கலம் தாருங்கள் என்று ஆட்டி கொடுத்து கொண்டிருங்கடா.
MIC – 60 ஆண்டுகளா அதைத்தானே ஆட்டிக்கொண்டிருக்கிறது-
நமது செயல் வீர தலைவர் சூபரமணியின் அடுத்த வீர செயல் 1.பெர்காசா விடம் மண்ணிப்பு கேட்டல்
2.வேல் பாரியை மண்ணி்ப்பு கேட்கவைத்தல்.
3.வேல் பாரிக்ககு கண்டன கடிதம் கொடுத்தல.
“நெருப்போடு விளையாடுகின்ற” ஒரு சமய அறிஞருக்காக இப்படி ஒரு அறிஞர் கூட்டம்!
4 . இந்தியர்களை இன்னமும் எப்படி அடிமைகளாக்கி , தன் எஜமானுக்கு விசுவாசம் காட்டுவது.
5 . UMNO காரங்கள் கையை முத்தமிடுவது. 6 . மதம் மாறும் கணவன் மார்களிடம் இருந்து , பிள்ளைகளை காப்பாடற்ற பேசுவேன் என்று கூறி விட்டு , தலைமறைவு ஆவது. 7 . நாடற்ற இந்தியர்களுக்கு நீல நிற IC வாங்கி தரேன்னு கூறிவிட்டு , காலம் கடந்து , ஒரு நாடு பெரும் போலுளாதார சுமையை தங்கும் போலுது வாங்கி கொடுப்பது …. இப்படி பல பல …
இதோ, நான் இங்கிருக்கின்றான் : http://www.e-vedicuniversity.com/thetrust.aspx
யார் சமய அறிஞர்?
பகுத்தறிவில்லா பிண்டங்களை தற்காப்பது அறிவுடைமை ஆகாது. என்ன செய்வது அகங்காரம் தலைக்கு மேல் போய் விட்டது–
அட விடுங்கப்பா… இதெல்லாம் பெரிய விசியமா… தேர்தல் வருகிறது, அதில் எப்படி வெல்லலாம் என்று யோசிப்போம்.
பாருங்க நம்மிடம் ஒற்றுமை இல்லை. அதன் எல்லா பிரச்சனைக்கும் காரணம். முதல்ல ஒற்றுமையாக இருந்து தேர்தல் வென்று அப்புறம் இவனுங்கள என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு யோசிப்போம். மறக்காம எங்களுக்கு ஒட்டு போடா மறக்காதீங்க. நாங்கள் உங்கள் பிரதிநிதி. எதுவாக இருந்தாலும் நாங்கதான் முடிவெடுத்து சாதிப்போம்.
நான் பள்ளி பருவத்தில் கேட்ட வசனம் எங்க தொகுதி தலைவரிடம் இருந்து. என்னும் மாறவில்லை என்று எண்ணுகிறேன்.