மக்களவையில் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை பெற முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும், பாஸ் கூறுகிறது

 

pasfortwothirdmajorityஅரசியல் இஸ்லாதை வலுப்படுத்த முஸ்லிம்கள் ஒன்றுபட்டு நாடாளுமன்ற மக்களவையில் முஸ்லிம்கள் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாஸ் முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசியல் இஸ்லாம் வலுப்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை இஸ்லாத்தின் குரல்களாக இருக்க வேண்டும் என்று பாஸின் தகவல் பிரிவுத் தலைவர் நஸாருடின் ஹசான் கூறினார்.

“உயர்மட்டத் தலைவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், நாம் இன்னும் பலவீனமாக இருக்கிறோம் மற்றும் நாம் நமது மண்ணிலேயே அவமானப்படுத்தப்படுகிறோம்”, என்று அந்த தெமர்லோ நாடாளுமன்ற உறுப்பினர் இன்று ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

இஸ்லாம் பெடரேசனின் சமயமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் முஸ்லிம் விவகாரங்கள் பேரச்சமூட்டுவதாக இருக்கிறது என்று அவர் கூறிக்கொண்டார்.

ஆகவே, முஸ்லிம்கள் அவர்களின் நீண்ட உறக்கத்திலிருந்தும் சொகுசு வாழ்க்கை முறையிலிருந்தும் விடுபட்டு அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாரவர்.

மலேசியாகினி மேற்கொண்ட ஓர் ஆய்வில், மக்களவையில் குறைந்தது 135 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், அல்லது தற்போதைய 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 61 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் என்று தெரியவந்துள்ளது.