மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமாரின் சொத்துப் பிரகடனம் குறித்து டிஎபியின் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் எ. சிவநேசன் எழுப்பியுள்ள சந்தேகம் குறித்து அவர் மன்னிப்பு கோர வேண்டும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயெகுமார் கூறுகிறார்.
சிவநேசனின் குற்றச்சாட்டுகளை வெளியிட்ட நாளிதழ் தமிழ் மலரில் அவரின் மன்னிப்பு கோரல் இடம்பெற வேண்டும், இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயக்குமார்.
சிவநேசன் சிரமப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி சுங்கை சட்டமன்ற தொகுதியை வென்று சாதனை படைத்தார். ஆனால், நான் நடுத்தர கும்பத்தில் பிறந்தவன். அவர் படைத்த சாதனை தம்மீது அவதூறு கூறுவதற்கான உரிமையை சிவநேசனுக்கு அளிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
“தமிழ் மலர் மே 21 இல் அதன் முதல் பக்கத்தில் வெளியிட்ட சிவநேசனின் அறிக்கையில் நான் எனது சொத்துகளில் சிலவற்றை மறைத்து விட்டேன், என் தகப்பனாரிடமிருந்து பெற்ற சொத்துகள் உட்பட, என்று கூறியிருப்பது நான் ஒரு போலியான சொத்துப் பிரகடனம் செய்ததின் மூலம் மலேசியர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட ஒரு பொய்யர் என்று பொருள்படும்.
“நான் நம்பிக்கைக்குரியவன் அல்ல என்பதோடு நான் சத்தியப்பிரமான பிரகடனம் சட்டம் 1960 இன் கீழ் குற்றம் புரிந்துள்ளேன் என்பது சிவநேசனின் கூற்றாகும்”, என்று ஜெயக்குமார் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.
சிவநேசனின் உணர்ச்சிவசப்பட்ட அறிக்கை அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களின் சொத்துடமையை அறிவிக்க வேண்டும் என்ற மலேசிய சோசியலிசக் கட்சியின் கொள்கையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது என்றாரவர்.
பதவியை வைத்து பணம் சம்பாதிக்கக்கூடாது என்பது கட்சியின் முக்கிய குறிக்கோள் என்று அவர் விளக்கம் அளித்தார்.
சிவநேசன் அவரது கவனத்தைச் சரியான இலக்கின் மீது செலுத்த வேண்டும் என்றார் ஜெயக்குமார்.
கடந்த புதன்கிழை, ஜெயக்குமார் ஆண்டுதோறும் அறிவிக்கிற அவரது சொத்துடமை பிரகடனத்தை வெளியிட்டார். அதில் அவர் சம்பளம் மற்றும் அலவன்ஸாக பெற்ற ரிம216,000 இல் மூன்றில்-இரண்டு பங்கை அவரது தொகுதிக்காக செலவிட்டுள்ளார்.
சிவநேசன் ஓர் அரைவேக்காடு. அவருடன் மோதி தனது கௌரவத்தை PSM தாழ்த்திக் கொள்கிறது. வரும் பொதுத்தேர்தலில் சுங்கை சிப்புட்டில் போட்டியிட இந்த சிவநேசன் என்பவருக்கு ஆசை. அதனால் ஆளும் தேசிய முன்னணியை தொந்தரவு செய்யாமல், அங்குள்ள MP ஜெயாவை மோப்பம் பிடிக்கிறார். 2006 ம் ஆண்டில் பினாங்கின் துணை முதல்வர் ராமசாமி DAP யில் சேர்ந்தார். அவரின் நிலையை எண்ணி, மத்திய செயலவையில் ராமசாமிக்கு இடம் ஒதுக்க நினைத்தது அக்கட்சி. அவ்வேளையில் மத்திய செயலவையில் சிவநேசனும், சிம்மாதிரியும் அங்கம் பெற்றிருந்தனர். சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ வைத்திராத சிம்மாதிரியை தொடாமல், ஒரு வழக்கறிஞரான சிவநேசனை ‘தூக்கிவிட்டு’, அவ்விடத்தில் ராமசாமியை வைத்தனர். இதிலிருந்து என்ன தெரிகிறது, சாதாரண சிம்மாதிரியின் செல்வாக்கு கூட பெற்றிராதவர் இந்த சிவநேசன். எதற்கும் உதவாத இந்த சிவநேசனுக்கு PSM publicity கொடுக்கிறது.
ஐயா சிவனேசா ! சாமிவேலுவின் சொத்துப்பிரகடனத்தில் கோளாறு இருக்கிறது என்று நீங்கள் முழக்கமிட்டுருந்தால், உங்கள் கால்களை முத்தமிட நான் தயாராய் இருக்கிறேன். அப்படி நீங்கள் துணிந்து கேட்டிருந்தால் உங்களுக்காக கோவில் கட்டி குடும்பமாக கும்பாபிஷேகம் செய்திருப்பேன் ! எங்கள் சமுதாயத்தை காக்க வந்த மகேந்திர பாகுபலி நீங்கள் தான் என்று முழங்கியிருப்பேன் !! அடுத்து வரப்போகும் பாகுபலி மூன்றின் கதாநாயகன் நீங்கள்தான் என்று பறைசாற்றி இருப்பேன் !!! போயும் போயும் புள்ளபூச்சிக்கு கொடுக்கு முளைத்துவிட்டது என்று சொன்னால்………நாங்கள் நம்பிட்டோம் !!!!!!
டாகடர் ஜெயக்குமார் வசதியான குடும்பத்தில்
பிறந்து வளர்ந்தவர் , அந்த வடடாரத்து மக்களுக்கு இது
தெரிந்த விசயம்தான் !!! ஆனால் ,,, ஆனால் சிவநேசனுக்கு
தெரியாமல் போனதெப்படி ????
சிவநேசனுக்கு இது தேவை இல்லாத வேலை. நமக்கு நாமே அடித்துக்கொள்ள வேண்டுமா? எல்லாவற்றையும் செய்துவிட்டு அப்புறம் தமிழர்களிடையே ஒற்றுமில்லை என்று ஒரேடியாக அளப்பீர்கள்! ஒற்றுமை தமிழர்களிடம் இருக்கிறது. தலைவர்களிடம் தான் இல்லை!
சிவநேசனின் ‘பவிசு’ எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வழக்கறிஞர் சிவநேசனும், டாக்டர் ஜெய்குமாரும் நீதிமன்றம் போகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சிவநேசன் கட்சியில் 37 நாளாளுமன்ற உறுப்பினர்களும், 107 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். மொத்தம் 144 மன்ற உறுப்பினர்கள்.இதில் எத்தனை பேர் அவரை ஆதரித்து நீதிமன்றம் வருவார்கள் என நினைக்கிறீர்கள்.? பத்து பேர் கூட சந்தேகம்தான். அதேவேளை, ஜெயக்குமார் கட்சியில் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான். இந்த ஜெய்குமாருக்கு நிறைய பேர் (சிவநேசன் கோஷ்டியைவிட) திரளுவார்கள். நல்ல மனிதர்.
சிவநேசா, உனக்கு என் இந்த வீண் வேலை!
தமிழனும் , தமிழனும் , அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டானா ! உறுப்படறது அவ்ளதான் ! இவனுங்கள பார்த்துதான் நம்ம தமிழனெலாம் இந்த நாட்டில் எப்படி உருப்படாமல் வாழனும் என்று கத்துக்கலாம் ! பேசாம மலாய் காரனுக்கும் ! சீனனுக்கும் ! வரும் தேர்தலில் வங்காள உம் தேர்தலில் நிப்பான் ! அவனுங்களுக்கு ஒட்டு போட்டுடுவோம் !! இவனெல்லாம் இருக்கருதும் ஒன்னு தான் இல்லாம இறுக்குறதும் ஒன்னுதான் ! தானை தலைவன் தான் அங்கு இருந்தான் , என்னத்த கிழிச்சான் ! மக்கள் பணத்தை அபேஸ் பன்னிட்டு தலைமறை வயூடான் !
சிவநேசன் வெறும் அரசியல் விளம்பரம்.வெற்றுவெத்து.சிவநேசன் போன்ற முட்டாள்கள் ஜெயகுமார் போன்ற சேவையாளர்களை தீண்டுவதும் ஒரு வகை அரசியல் விளம்பரம்தான்.செத்த பிணத்தை வைத்தும் அரசியல் விளம்பரம் தேடும் ஓநாய்தான் இந்த சிவநேசன்.இந்திய ச்முதாயத்தின் உணர்ச்சியினை தூண்டியே அரசியல் பிழைப்பு நடத்தும் குள்ளநரி.நாட்டின் ௧௪வது பொது தேர்தலில் பேராக் மாநிலத்தில் ஜசெக அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும்.ஆனால்,சிவநேசன் மட்டும் தோல்வி அடைவது உறுதி.இது மக்களின் தீர்ப்பு.
ஆரமிச்சிட்டாய்ங்கய்யா ….. ஆரமிச்சிட்டாய்ங்கய்யா ….இவர்களின் கெளரவ பிரச்னை , நாட்டின் பிரச்சனையை விட பெரியதா ?
சிவநேசன் மன்னிப்பு கேட்டாரா? அப்படி மன்னிப்பு கேட்காத பட்சத்தில் டாக்டர் ஜெயக்குமார் சட்ட நடவடிக்கை எடுத்தாரா? வர வர அரசியலை விட சாக்கடை தேவலாம் போல!