மூத்த எழுத்தாளரும் பத்திரிகியாளருமான ரெஹ்மான் ரஷிட் ,62, இன்று காலை காலமானார்.
அவரின் இளவல் ரபிக் ரஷிட்டை பெர்னாமா தொடர்புகொண்டபோது காலை மணி 6.30 வாக்கில் செலாயாங் மருத்துவமனையில் அவர் மரணமுற்றதாக தெரிவித்தார்.
“இறப்புக்கான உண்மைக் காரணம் இன்னும் தெரியவில்லை. முன்பிருந்த மாரடைப்பு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்”, என்றாரவ்ர்.
அவரது அண்ணனின் உடல் கோலா குபு பாருவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சில் இணை ஆசிரியராக பணியாற்றிய ரெஹ்மான் ஹாங்காங்கிலிருந்து வெளிவந்த ஏசியாவீக்கிலும் பத்தி எழுத்தாளராக இருந்தார்.
“Peninsula: A Story of Malaysia” , “A Malaysian Journey” போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். மலேசிய பத்திரிகையாளர் கழகத்திடமிருந்து 1985-இல் சிறந்த பத்திரிகையாளர் விருதையும் பெற்றிருக்கிறார்.