குவான் எங்: பிரதமர் வேட்பாளர் தேர்வு நிகழ்ச்சி நிரலில் இல்லை

 

Guanengedfiesபக்கத்தான் ஹரப்பான் 14 ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதன் பிரதமர் யார் என்பது குறித்து இப்போதைக்கு அது எந்த முடிவும் எடுக்காது என்று டிஎபியின் தலைமைச் செயலாளர் குவான் எங் கூறினார்.

ஹரப்பான் தலைவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஜூன் 9, சந்திக்கின்றனர். ஆனால், பிரதமர் என்பது பற்றி எதுவும் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றாரவர்.

இந்தச் சந்திப்பை வழக்கமான ஒன்று கூறிய குவான் எங், பல தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர்.

“பிரதமர் பற்றிய கேள்வி இந்தக் கூட்டத்தில் எழாது’, என்று குவான் எங் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னாள் பிரதமர் மகாதிரின் பெயர் இப்பதவிக்கு அடிபடுவதால் இக்கேள்வி மீண்டும் தலையெடுத்துள்ளது.