கடந்த ஏப்ரலில் அரசாங்கம் மலேசியன் இந்தியன் பெருந்திட்டத்தை (எம்ஐபி) அறிவித்தது. இந்தியச் சமூகம் தொடர்ந்து அரசாங்கத்தை 14 ஆவது பொதுத்தேர்தலில் ஆதரித்தால் மட்டுமே அத்திட்டத்தின் நோக்கங்களை அடைய முடியும் என்று பிரதமர் நஜிப் ரசாக் பகிரங்கமாக அறிவித்தார்.
இந்தியர்கள் முடிவு எடுப்பதற்கு முன்னர் சிந்திக்க வேண்டும்; அந்தக் கணிப்பில் அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டத்தைக் கொண்டிருக்கும் கட்சியும் உள்ளடங்கியிருக்க வேண்டும் என்றாரவர்.
மலேசியாவில் இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவதற்காக பாரிசான் நேசனல் மேற்கொண்ட நடவடிக்கை பதிவேட்டை மறுக்க முடியாது என்று பறைசாற்றிய பிரதமர் நஜிப், இது எதிரணியைப் போன்றதல்ல, அதனிடம் சமூகத்தை மேம்படுத்தியதற்கான பதிவேடு அல்லது செயல் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
“நாம் தூண்டிவிடப்பட்டு உணர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிப்போமானால், அது வீணானதாகிவிடும், பிறகு இழப்புக்கு ஆளாகிவிடுவேம். நாடு மேலும், மேலும் வெற்றி பெற்றுவருகிறது, குறிப்பாக தேசிய உருமாற்றம் 2050 காட்சியில்.
“நமது பேரக்குழந்தைகள் இன்னும் பள்ளிக்கூடங்களில் இருக்கிறார்கள். அவர்கள் இப்போதிலிருந்து மலேசிய வெற்றியின் பரம்பரைச் சொத்தை அடைய வேண்டும்”, என்று தாமான் காயா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சி பற்றி அளிக்கப்பட்ட விளக்கத்தைச் செவிமடுத்த பின்னர் நஜிப் கூறினார்.
இந்தியச் சமூகத்திற்கான எம்ஐபி திட்டம் அனைத்தும் அமலாக்கப்படுவதைக் கண்காணிக்கும் செயல்முறை தலைவராக மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தை தாம் நியமித்திருப்பதாக நஜிப் தெரிவித்தார்.
– FMT
இன்னுமாய மக்கள் உங்களை நம்புகிறர்கள்
14 ஆவது தேர்தலில் பரிசான் வென்றால்தான் இத் திடடம் முழுமை பெறுமா ?.பிரதமரே பரிசான் வென்றால் அப்படி ஒரு திடடமே இருக்காது என்பதும் எம் மக்களுக்கு தெரியும்.
13 ஆவது தேர்தலில் ஆதரவு கொடுத்து, ஆப்பு தான் மிச்சம் !
சிரிப்பு வருது , சிரிப்பு வருது !
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!
முன்பு வேதா மூர்த்தி அவர்களை வைத்து நாடகமாடிய இவர், இப்பொழுது மலேசிய இந்தியர் பெருந்திட்டம் என்று சொல்லி நாடகமாடுகிறாரோ ????
ஆப்பு தான் போடணும் திருடன்
அடுத்தவன் ஜெயிக்க இந்த தமிழன்தான் இளிச்சவாயன்; காரணத்தை இந்த மானகெட்ட மா இ கா சொல்லும் !
கடந்த பொதுத்தேர்தல் ஹிண்ட்ராப் பாரிசான் வாக்குறுதி என்ன ஆனது ? வெற்று வாக்குறுதி வெறுப்படைந்த அறிவிப்பு.
பிரதமர் அவர்களே… நம்பிக்கை என்று சொல்லியே எங்களை நம்பிக்கை இழக்க வைத்தீர்கள் இப்போது இந்தியர் பெரும்திட்டம் என்கிறீர்கள் எப்படி நம்புவது. நாடெங்கும் இப்போது மைடப்தார் செய்ய தொடங்கி விட்டீர்கள் சரிதான் இரண்டே மாதத்தில் குடியுறிமை பிரச்சனைக்கு தீர்வு காணஉறுதி தர முடியுமா…?
சிவப்பு,வெள்ளை,கருப்புஉள்ளம்முள்ள
மலாய்க்காறர்கள்கையைவிரித்துட்டார்கள்
போல,14வதுபொதுத்தேர்தலில்வெற்றிபெற
இந்தியர்எம்,ஜ,பிஎன்றநல்லகாலம்பொறக்குது
நல்லகாலம் சுப்புடுவால்நல்லகாலம்
பொறக்குது கோடங்கிஅடிக்கிறார்நம்பிக்கை
நாயகர் நஜிப்பு,
இது மறைமுகமான லஞ்சம் அல்லவா ? நீங்கள் ஒட்டு போட்டு BN ஆட்சிக்கு வந்தால் பெருந்திட்டம் உண்டு இல்லை என்றால் பெப்பே …… இது புரியாமல் இது உலக அதிசயம் என மக்களை குழப்பி வரும் மஇ கா மற்றும் ஜிப் கூஜா தூக்கிகள் இருக்கும் வரை மலேசிய இந்தியர் தலையில் யாரும் மிளகாய் அரைக்கலாம் .
Janji GE 13 dijadi capati ….
இந்த புளு ப்ரிண்ட் ஒரு புளுகு ப்ரிண்ட் என்பது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும். இது கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று ‘___’ மேல் சத்தியம் பண்ணவா போகிறீர்கள். அப்படியே சத்தியம் பண்ணினாலும் அதை மீறினால் சாமி கண்ணை குத்தி விடுமா என்ன…எத்தனையோ பாவம் சத்தியம் மீறல் எல்லாம் நடந்தாச்சி எந்த சாமியும் கண்ணைக் குத்தவில்லையே..நடத்துங்க …அரங்கேத்துங்க உங்க நாடகத்தை..
தேர்தல் சமயங்களில் நீங்கள்ம் எங்கள் கால்களில் விழுவதும் பிறகு அடுத்த 5-ஆண்டுகளுக்கு எங்கள் கோரிக்கைகளுக்காக நாங்கள் உங்கள் கால்களில் விழுவதும் கடந்த 60-ஆண்டுகளாக நடைபற்றுவரும் சம்பவம்தான்.
‘மற்றவர்கள்’ அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமலேயே அவர்களின் உரிமைகள் அவர்களுக்கு தரப்படும்போது நாங்கள் மட்டும் ஏன் எங்களின் உரிமைக்காக காலம் காலமாக குரல் எழுப்பிகொண்டே இருக்க வேண்டும்? நாங்கள் கேட்காமலேயெ எங்கள் உரிமைகள் தரப்படும் காலம் வரவேண்டும். எனவே, எங்களுக்கு வேண்டாம் இந்த MIB-பெருந்திட்டம். எங்களுக்கு தேவை நாங்களும் மலேசியர்கள் எனும் உரிமை. நாங்கள் மூன்றாந்தர நாலாந்தர குடிமக்கள் அல்லர். நேற்று வந்த கள்ளக் குடியேறிகள் எல்லாம் மலேசியர்கள் என்று அங்கீகரிக்கப்படும்போது ஏன் இன்னும் நாங்கள் ஓரங்கட்டப்படுகிறோம்?
ரொம்ப வேண்டாம். கடந்த 13-வது பொதுத் தேர்தலுக்குப் பின்:
1. எங்கள் பிள்ளைகள் எத்தனை பேருக்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் இடங்கள் கிடைத்தன?
2. எங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் JPA-Scholarship- பெற்றார்கள்?
3.
தனித்து வாழும் தாய்மார்கள் எத்தனை பேருக்கு அரசாங்கம் உதவியது?
4. தகுதி உடைய எத்தனை இந்தியர்களுக்கு பிறப்புப் பத்திரமும், அடையாளக்கார்டும் வழங்கப்பட்டன? 5. எத்தனை இந்தியர்களுக்கு அரசாங்க வேலைகள் வழங்கப்பட்டன? எத்தனை தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன?
6. எத்தனை இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன?
மற்ரவர்கள் உரிமையைப் பற்றி நாங்கள் கேட்கவில்லை. எங்கள் உரிமையில் கைவைக்காதீர்கள் என்று பணிவுடம் கேட்கிறோம். இந்தக் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். பிறகு சொல்கிறோம் உணர்ச்சிகளின் அடிப்படையில் நாங்கள் வாக்களிக்கப்போகிறோமா அல்லது உணர்ச்சியற்ற பிண்டங்களாக மண்டூகங்களாக வாக்களிக்கப் போகிறோமா என்று…!!!!!
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே… நம் நாட்டிலே.. பாடல் வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது… 13வது தேர்தலில்
இன்டிராப்புடன் (INDRAF) செய்த ஒப்பந்தத்தின் பிரதிபலிப்பை நாங்கள் கானல்நீராய் கண்டு வருகிறோம். இன்னுமா நம்புவது????
நாம் தந்த பணத்தையெல்லாம் ஏப்பம் விட்ட தானை தலைவனையும் ,அவனின் அடி வருடியாக இருந்தவனையெல்லாம் இந்த இந்திய சமுதாயம் ஏதும் புடுங்க வில்லை ! ஆசை வார்த்தைகளையும் ! அடுக்கு மொழி வசனங்களையும் பேசி சமுதாயத்தை கொள்ளை அடித்தவர்கள் அரசாங்கத்தில் இந்த சமுதாயத்தை பிரதிநிதித்த இந்திய தலைவர்கள் !ஆயிரம் ஆயிரமாக கொடுங்கள் ! உங்களுக்கு கோடி கோடி யாக கொடுக்கிறேன் என்று நஜிப் நமக்கு வாக்களித்தாரா ! இந்திய சமுதாயத்தை பொருளாதாரத்தில் உலகமே பார்த்து வியக்கும் வகையில் உச்சத்திற்கு கொண்டு போகிறேன் என்று , அரசாங்கம் இந்த சமுதாயத்திற்கு அளித்த மானியங்களையும் ! நிறுவன பங்குகளையும் களவாடி தின்றவர்கள் இந்த சமுதாயத்தின் காவலர்கள் என்று பறை சாட்ட்றி கொண்ட தானை தலைவன் ! புரட்சி தலைவன் ! மக்கள் தலைவன் ! கரிகாலன் நீங்கள் கேட்ட அத்துணை கேள்விகளையும் ம .இ . கா . காரனிடம் கேளுங்கள் ! அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வருகிறதென்றால் ! சமுதாயத்தை பிரதி நிதிக்கும் கட்சிகளும் அதன் தலைவர்களும் ! மக்களும் தான் அத்திட்டம் முறையாக செயல் படுகிறதா ! என்று கண்காணிக்க வேண்டும் ! நாட்டின் பிரதமர் நமக்கு ஊட்டி விட மாட்டார் .!!
s.maniam அவர்களே..வரும் பொதுத்தேர்தலுக்காக ஓட்டுக் கேட்டு வரும் ம.இ.கா காரனுக்கும் மட்டும் அல்ல எதிரணியினருக்குக் கூட நான் எனது கேள்விகளைத் தயாராகவே வைத்திருக்கிறேன். அவற்றுக்கு தப்பாக பதில் தருபவனும், நழுவிக்கொள்ல முயல்பவனும் என்னிடமிருந்து தப்ப முடியாது.
நிற்க..
ஒரு பிரதமரின் வேலை அறிவிப்புக்களை செய்வதோடு நின்றுவிடுவதாக நான் எண்னவில்லை. அவர் அறிவித்த திட்டங்கள் முறையாக நடைபெறுகின்றனவா…அவை போய்ச் சேர வேண்டியோருக்கு முறையாக சென்றடைகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும், அதுவும் அவரின் கடமைதான் என்று என் சிற்றறிவு சொல்கிறது. அந்த திட்டங்களினால் பலனடைந்தோரின் விபரங்களைக் கூடவா அவர் கண்டறிய முடியாது? அப்படிக் கேட்டறிந்திருந்தால் பல முறைகேடுகளைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா? மாண்புமிகு பிரதமர் கோடி கோடியாகக் கொடுக்கிறேன் என்று சொன்னதாக நான் கூறவும் இல்லை. அவர் அப்படிக் கூறாதது பற்றி நான் இங்கே கருத்துக் கூறவும் இல்லை. (சற்று நேரம் ஒதுக்கி, மீண்டும் மேலே ளைதற்கு முன் நான் சொன்ன எனது கருத்துக்களை பொறுமையாகப் படித்துப் பார்க்கவும்) நான் கேட்டது என் சமுதாயத்துக்கு உரிய உரிமையைப் பறிக்காமல் அப்படியே கொடுங்கள் என்றுதான். நான் சொன்ன ‘என் சமுதாயத்தில்’ நீங்களும் அடக்கம் என்று தான் நினைக்கிறேன்.
மற்றபடி இங்கே கருத்து சொல்லும் பலர் அவன் திருடினான் இவன் கொள்ளையடித்தான் என்று பொதுவாக மட்டுமே சொல்கிறார்களே தவிர அவர்களில் யாரும் அதற்கான தக்க ஆதாரத்தை முனவைப்பதில்லை. நீங்களாவது அந்த ஆதாரங்களை – ஆவணங்களை இங்கே முன் வையுங்கள். இதைப் படித்துக் கொண்டிருக்கும் பல வழக்கறிஞர்கள் மனமுவந்து வழக்குத் தொடுக்கவும் வழக்காடவும் தயாராக இருக்கிறார்கள். அப்படி இங்கே அவற்றை முன்வைக்க விருப்பம் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது இலவச சட்ட ஆலோசனை மன்றம். அவர்களை அணுகுங்கள். Telephone: 03-8885 1000
காலா கரிகாலன் அவர்களே அருமையாக கூறினீர்கள். எல்லாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும். சாமிவேலு சரிந்தது போல் சரிந்தால் நமக்கு விடிவு காலம் பொறக்கலாம்.
இத இத இதத்தான் நான் எதிர்பார்தேன். பரிசான் நேசனலின் கொடிக்கம்பம் ஆடிக்கொண்டிருக்கிறது. (கொடியல்ல.) எந்த நேரத்திலும் பிடுங்கப்பபடலாம் அல்லது சாய்கப்படலாம். நம்பிக்கை நாயகனின் பகிரங்க அறிவிப்பு இதனை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
அதே தமிழா இவனை நம்பி ஏமாறாதே இவனுக்கு சாவு நெருங்கிவிட்ட்து
திருகாலா கரிகாலன்அவர்களே,இன்று
தானைத்தலைவன்,கோணத்தலைவன்
மொத்தமாக பங்குபணத்தைசுரிடிவிட்டதாக
புலம்புவதால்யாதுபயனுமில்லை,தானைக்கு
கூஜாதூக்கியோரும்உண்டு,பிரதமர்மகாதீர்
இந்தியர்களுக்காக ம,இ,கவுக்கு ஒதுக்கிய
பங்குகள் சோதிநாதனின்SdnBhd
நிறுவனத்தின மூலம்கோணத்தலைவருக்கு
திர்ப்பிவிடப்பட்டதாக ஒருகட்சியின்தலைவர்
கேவியஸ் பகிரங்கமாக காசோலையின்
நகலைநாழிதலில் வெளியிட்டார்,அவரும்
வழக்கறிஞர்தான் பிறகுஎன்ன ஆச்சோ
அவரும்அமைதியாயிட்டார்,பிரதமர்மகாதீர்
தெரிந்தும்தெரியாததுபோல்இருந்துட்டார்
ஏம்ஸ்கல்லூரி ம,இ,கவின்சொத்து அதை
மீட்பேன் என்றுஅறிக்கைவிட்டபழனிவேலை
சுப்ரமனியத்தை முன்நிறுத்திஒரம்கட்டப்பட்டார்
மைக்கா கூட்டத்தில்கேள்விகேட்டமுனியாண்டி
என்றுநினைக்கிறேன் தலையில்அடித்து
இரத்தம்வழிய வெளியானார் சுப்ராபேச
முடியாமல்மைக்கைபிடிங்னார்கள்,யாராலும்
அப்பனையும்,மகனையும்அசைக்கமுடியாது
ங்றேன்!
1MALAYSIA என வாய் கிழிய பேசும் நஜிப் மூவினமும் உயர்வு தாழ்வின்றி பயன்பெறும் வகையில் “மலேசியர் பெருந்திட்டம்” என்று ஒரு திட்டத்தை அல்லவா அறிவித்து இருக்க வேண்டும்.
“மலேசிய மலாய்க்காரர் பெருந்திட்டம்” ;
“மலேசிய சீனர் பெருந்திட்டம்” ;
“மலேசிய இந்தியர் பெருந்திட்டம்” ;
என மூவினத்துக்கும் மூன்று திட்டங்களை நஜிப் வகுத்து,
தனது 1MALAYSIA கொள்கைக்கு தாமே ஆப்பு வைத்து கொள்வார் என்பது யாரும் கனவிலும் நினைக்காத ஒன்று.
முன்னாள் பிரதமர்கள் எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் இந்தியர்களை வஞ்சித்தார்கள் என்றால்
நஜிப் “மலேசிய இந்தியர் பெருந்திட்டம்” என்று அறிவித்து இந்தியர்களை வஞ்சிக்க போகிறார்.
முன்னாள் பிரதமர்களின் கீழ் மலேசிய இந்தியர்கள் அடைந்த பலனை முன்மாதிரியாக கொண்டு, இப்போதே மலேசிய இந்தியர்கள் விழித்து கொள்வது நல்லது. இல்லையென்றால் இன்னும் 60 ஆண்டுகளுக்கு உறங்க வேண்டி இருக்கும்..
இது அரசியல் அராஜக அறிக்கை ..இது ஒருவகை ஊழல் அரைசியல்தான். இந்தியர்கள் சமூக குத்தைகையில் உள்ளோம் என்றால் நான் மயிறு அரசியல் பேசுகிறேன் என்கிறான்.
ராஜேந்திரன் நீலத்தாள் எல்லா இந்திய இனத்துக்கும் என்கிறார், பருப்பு வேகாது போல தெரியுது. ராதா ரவி சொன்னது போல கூட்டிககழித்து கிழிச்சா நீலத்தாள் மாதவிடாய் சிகப்பு கோட்டெஸ்த்தானோ? புளு பிரிண்ட சட்டத்துக்குள் வெச்சி அமுக்க முடியாதோ ? நாட்டுல 30 ஆயிரம் சட்டநிபுணர்கள் இருப்பாங்களா ?
நம்பிக்கை நாயகன் நாம் எவ்வளவு மடையர்கள் என்று அப்பட்டமாக சொல்கிறான் அவ்வளவுதான். 60 ஆண்டுகள் அனுபவம்.