ஜிஎல்சி-க்கு அரசியல்வாதிகளை நியமிப்பதை நிறுத்துவீர்: எம்ஏசிசி வாரியம் கோரிக்கை

azizஅரசுத்   தொடர்பு   நிறுவனங்களுக்கு    அரசியல்வாதிகளைத்   தலைவர்களாக   நியமிக்கும்   பழக்கத்தை     நிறுத்த    வேண்டும்     என்று   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணைய (எம்ஏசிசி)   ஆலோசனை   வாரியம்    அரசாங்கத்தைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

“அப்பதவிக்கு    எதிர்பார்க்கப்படும்   நன்னடத்தைத்   தரம்       அவர்களிடம்   இருப்பதில்லை”,  என   அவ்வாரியத்   தலைவர்    துங்கு    அப்துல்   அசிஸ்   கூறினார்.

சில   விதிவிலக்குகள்   இருந்தாலும்    அரசாங்கம்    ஆரோக்கியமற்ற   இப்பழக்கத்தை   விட்டொழிக்க    வேண்டும்.  இது   ஊழல்    எதிர்ப்புப்    போராட்டத்துக்கு   உதவவில்லை.

பெல்டா  குளோபல்   வெண்ட்சர்ஸ்   ஹோல்டிங்ஸில் (எப்ஜிபி)     எம்ஏசிசி  மேற்கொண்டுள்ள   விசாரணை    தொடர்பில்     வெளியிட்டிருக்கும்      அறிக்கையில்   துங்கு   அசிஸ்    இவ்வாறு   கூறினார்.