தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சேயுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்கிறார் தேர்தல் ஆணைய (இசி) தலைவர் ஹஷிம் அப்துல்லா.
இசி அதிகாரிகள் மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள தேர்தல் முறைகளை நன்கு கற்றறிந்து வந்திருக்கிறார்கள். எனவே, மலேசியாவில் தேர்தல் நடத்த அவர்கள் போதுமான அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்றாரவர்.
இசி இதுவரை எந்தவொரு என்ஜிஓ-வின் உதவியையும் நாடியதில்லை .
“அதற்கு அவசியம் என்றால், அவற்றை நாடுவோம்”, என ஹஷிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
இவ்வாரம் ஓரியெண்டல் டெய்லிக்கு அளித்த நேர்காணலின்போது, பெர்சே ஒரு சட்டவிரோத அமைப்பு என்பதால் இசி அதனுடன் ஒத்துழைக்காது என்று ஹஷிம் கூறியிருந்தார்.
பின்னர், பெர்சே தான் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்புத்தான் என்பதை இசி தலைவருக்கு நினைவூட்டியதுடன் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புடன் ஆணையம் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தியது.
மலம் சாப்பிடும் EC நடுநிலைமை வகிக்க தெரியல இதுலே வேற பெரிய புழுதி பேச்சு பேசறான் மவனே உனக்கு சூடு நிச்சயம்
மற்ற நாடுகளுக்குப் போய் கற்று வந்தார்களா அல்லது சுற்றி வந்தார்களா? ஏதோ தவறு நடந்திருக்கிறது!