ஷாபி: அறிக்கை வெளியிடுவேன் ஆனால், இன்றல்ல

courtமூத்த     வழக்குரைஞர்     முகம்மட்      ஷாபி   அப்துல்லா,    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    தமக்கு      ரிம9.5 மில்லியன்   ரிங்கிட்   அளித்ததாகக்  கூறப்படுவது    குறித்து    விரைவில்  அறிக்கை   வெளியிடப்போவதாகக்  கூறினார்.

இன்று   கோலாலும்பூர்   ஜாலான்   டூடா    நீதிமன்ற   வளாகத்தில்    செய்தியாளர்கள்   அவரைச்  சூழ்ந்துகொண்டு    இவ்விவகாரம்   குறித்து   வினவினர்.

“நான்   ஓர்   அறிக்கை   விடுவேன்,  ஆனால்   இன்று   அல்ல”,  என்றவர்  கூறியதாக   எப்எம்டி  கூறியது.  இதைச்   சொல்லிவிட்டு   வழக்குரைஞர்   காரில்    ஏறிப்   புறப்பட்டுச்    சென்றார்.

கடந்த   வாரம்     சரவாக்   ரிப்போர்ட்,  ஷாபி   இரண்டு   பகுதிகளாக –   2013,  செப்டம்பர்   11இலும்  ,  2014  பிப்ரவரி   17இலும் –   அத்தொகையைப்  பெற்றார்   எனக்  கூறியது.

அன்வார்  இப்ராகிமின்   இரண்டாவது    குதப்புணர்ச்சி    வழக்கு     உயர்   நீதிமன்ற   விசாரணைகளுக்குச்    சென்றபோது   ஷாபி    அரசுத்தரப்பு    வழக்குரைஞராக    செயல்பட்டார்.

2015   பிப்ரவரி   10இல்,  கூட்டரசு    நீதிமன்றம்    அவர்  குற்றவாளியே   என்பதை   நிலைநிறுத்தியதை    அடுத்து   அன்வார்   இப்போது    ஐந்தாண்டு   சிறைவாசம்   அனுபவித்து   வருகிறார்.