நஜிப் இந்தியர்களுக்கான பெருந்திட்டத்தின் உண்மையான நோக்கத்தைக் கக்கி விட்டாரா?

 

NajibrevealstrueintentionofMIBமறைமுகமாக எச்சரிக்கை விடுபவர் அரசியல் மேதையாகிவிட முடியாது. அது அவரை நம்பிக்கை இழந்தவராகவோ மூர்க்கத்தனமானவராகவோ காட்டி விடும். இதற்கு எடுத்துக்காட்டு மலேசியப் பிரதமர் நஜிப் இந்தியர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை: இந்தியர்கள் தொடர்ந்து அடுத்த பொதுத்தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தால் மட்டுமே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மலேசிய இந்தியன் பெருந்திட்டம் (எம்ஐபி) அதன் நோக்கங்களை அடைய முடியும்.

இப்படியான “வாக்குகளுக்கு வலைவிரிக்கும்’ தந்திரம் நாட்டின் உன்னதப் பதவியிலிருக்கும் ஒருவருக்கு தகுந்தல்ல.

இந்தப் பெருந்திட்டம் இந்தியர்களின் வாக்குகளைத் திரட்டுவதற்கான ஓர் அரசியல் தந்திரம் என்று எதிரணி அரசியல்வாதிகளும் மற்றும் பலரும் கூறியுள்ளனர்.

அடுத்த பொதுத்தேர்தலில் பல தொகுதிகளில் முக்கோண போட்டிகள் எதிர்பார்க்கப்படுவதால் அவர்களின் (இந்தியர்களின்) வாக்குகள் அத்தியாவசியமானவைகளாக இருக்கின்றன.

நாங்கள் தெரிவித்த கருத்துகள் ஆளுங்கட்சி ஆதரவாளர்களின், குறிப்பாக மஇகாவினரின், கூச்சலை கிளப்பி விட்டுள்ளது.

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்களின் அவலங்களுக்குப் பரிகாரம் காணும் நோக்கத்தில் இந்த ஆவணத்தை தயாரிப்பதில் அவர்கள் ஆற்றிய பங்களை நாங்கள் மட்டம்தட்டுவதாக எண்ணி அவர்கள் சீற்றமடைந்துள்ளனர்.

பிஎன் தோல்வி பெருந்திட்டத்தைப் பாதிக்காது

இந்த முயற்சியின் பின்னிருக்கும் தூய்மையான நோக்கங்களை நாங்கள் உணர்ந்துகொள்ள மறுத்து விட்டோம் என்று கூறி அதிர்ச்சியடைந்த செடிக் தலைமை இயக்குனர் என். எஸ் இராஜேந்திரன் வாயில் நுரைதள்ளி நிற்கிறார்.

ஆனால், நஜிப்பின் அறிக்கை அம்னோ தலைமையிலான அரசாங்கத்தில் இது வழக்கமான ஒன்று என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கடுமையானதாகக் கருதப்படும் அடுத்தப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற இது ஒரு நெம்புகோல்.

மலேசிய இந்திய ர் கள் ஒன்றும் அவ்வளவு முக்கியமானவர்கள் அல்லர்.

இந்தியர்களின் சமூக-பொருளா தார  தகுதியை மேன்மையுறச் செய்வது மற்றும் அவர்களின் நாடற்ற நிலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதில் நஜிப் உண்மையிலேயே ஆர்வம் கொண்டிருந்தால், அவர் அக்குறிப்பிட்ட பிரச்சனைகளில் முழுக்கவனத்தையும் செலுத்தியிருப்பார்.

நிச்சயமாக, அதிகாரத்திற்கு வரும் அடுத்த அரசாங்கத்தாலும் அந்தப் பெருந்திட்டத்தை அமலாக்க முடியும் என்பதை நாங்கள் பிரதமருக்கு நினைவூட்ட வேண்டியதில்லை. அல்லது, நாங்கள் செய்ய வேண்டுமா?