போதைப் பொருள் கைதிகளுக்காக ஆண்டுதோறும் ரிம425 மில்லியன் செலவு

drugsஅரசாங்கம்   நாடு  முழுவதும்   போதைப்  பொருள்   குற்றங்களுக்காக   சிறை  வைக்கப்பட்டுள்ள    கைதிகளுக்காக      ஆண்டுதோறும்   ரிம 425 மில்லியனைச்   செலவிடுகிறது.

நாடு  முழுவதும்   சிறையில்   உள்ள  59,600   கைதிகளில்   33,500   பேர்  அதாவது   56   விழுக்காட்டினர்    போதைப்  பொருள்  தொடர்பான  குற்றம்  புரிந்தவர்கள்.

நேற்று,    தேசிய   போதைப்   பொருள்- எதிர்ப்பு   அமைப்பு,   போலீஸ்,  சிறைத்துறை,   மலேசிய    போதைப்  பொருள்   தடுப்புச்   சங்கம் (பெமாடாம்)  ஆகியவற்றுடன்   ஒத்துழைப்புடன்          மலாய்  மெயில்    ஏற்பாடு    செய்திருந்த    போதைப்  பொருள்- எதிர்ப்புக்   கருத்தரங்கம்   ஒன்றில்   இப்புள்ளி  விவரங்கள்   முன்வைக்கப்பட்டன.

போதைப்  பொருள்   குற்றவாளிகளில்   71.3  விழுக்காட்டினர்   மலாய்க்காரர்கள்.

கடந்த   ஆண்டில்    போதைப்   பொருள்    குற்றச்செயல்களுக்காக    கைதான    30,844   பேரில்   24, 902  பேர் (80.7 விழுக்காடினர்)  மலாய்க்காரர்கள்.