அரச மலேசிய ஆகாயப் படை (ஆர்எம்ஏஎப்) ஜெட் விமானமொன்று குவாந்தான் ஆகாயப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட அரை மணி நேரத்தில், காலை மணி 11.30க்கு, அதனுடன் தொடர்புகள் அறுந்ததை அடுத்து காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.
அந்த ஹாக் 108 ரக விமானம் குவாந்தானுக்கு வடக்கில் பகாங்-திரெங்கானு எல்லைக்குயரே பறந்து சென்றபோது காணாமல்போனதாக நம்பப்படுகிறது.
“தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது”, என ஆர்எம்ஏஎப் ஓர் அறிக்கையில் கூறியது.
ஆர்எம்ஏஎப்- பிடம் இரு- இருக்கைகள் கொண்ட ஹாக் 108 ரக விமானங்கள் ஆறு உள்ளன. அவை பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

























