பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ரிம10 மில்லியன் பெறவில்லை என்ற சிலாங்கூர் மசீச-வின் மறுப்பை ஈராண்டுகளுக்குமுன் மசீச முன்னாள் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் ஒரு நேர்காணலின்போது கூறிய செய்தி பொய்யாக்கலாம் என்கிறார் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.
2015 அக்டோபரில், cari.com.my வலைத்தளத்தில் வெளியான ஒரு நேர்காணலை நினைவுகூர்ந்த கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங், அந்நேர்காணலில் சுவா கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நஜிப் பிஎன் பங்காளிக் கட்சிகள் நிதி சேகரிக்க உதவினார் என்பதை ஒப்புக்கொண்டிருந்தார் என்றார்.
இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, சிலாங்கூர் மசீச சரவாக் ரிப்போர்ட் செய்தியைப் பொய்யென்று கூறினால் கட்சியின் வங்கி கணக்கறிக்கையைக் காண்பிக்க வேண்டும் என்றாரவர்.
“அது ‘நம்பகத்தன்மையற்ற ஒரு வலைத்தளம்’ சுமத்திய குற்றச்சாட்டு என்று சிலாங்கூர் மசீச நினைக்குமானால் அக்கட்சியின் வங்கிக் கணக்கறிக்கையைக் காண்பிக்கும் துணிச்சலும் திடநம்பிக்கையும் அதற்கு இருக்க வேண்டும்.
“அதை வைத்து மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்”, என்றாரவர்.