இந்த ஆண்டில் டிஎபி மூன்று விருந்துகளை மட்டுமே நடத்தியுள்ளது. அதற்கான பணம் பொதுமக்களிடம் டிக்கெட் விற்கப்பட்டதன் மூலம் பெறப்பட்டது என்று கட்சியின் தலைமைச் செயலாளர் குவான் எங் கூறினார்.
“ஏன் இப்படிப்பட்ட பொய்கள் சொல்லுகிறீர்கள்?”, என்று வினவிய குவான் எங், மாநில அம்னோ இணைப்புத் தலைவர் ஸைனால் அபிடின் ஓஸ்மான் டிஎபி பல்வேறான விருந்துகளை நடத்துவதாகவும், அது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பினாங்கில் நடப்பதாகக் கூறியிருந்ததை அவர் மறுத்தார்.
“நாங்கள் ஒவ்வொரு இரவும் விருந்துகளுக்குப் போகிறோம், சில விருந்துகளை கோவில்களும் மற்றும் மன்றங்களும் நடத்துகின்றன, சில சமயங்களில் விருந்துகள் இல்லங்களில் நடத்தப்படுகின்றன. ஆனால் இவை டிஎபியால் ஏற்பாடு செய்யப்படுவை அல்ல”, என்று பினாங்கின் முதல்வருமான குவான் எங் கூறினார்.
“டிஎபியின் விருந்துகளுக்கு, பணம் திரட்டுவதற்கு நாங்கள் ரிம20 லிருந்து ரிம30 வரையில் டிக்கெட்டுகள் விற்கிறோம், ஏனென்றால் அம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எங்களிடம் பணம் இல்லை”, என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட உயர்தர அரசாங்க அதிகாரி போலல்லாமல், டிஎபி சவூதி அரேபியாவிலிருந்து நன்கொடை பெறவில்லை என்றாரவர்.
நேற்று, டிஎபி எவ்வாறு அதன் ஏகப்பட்ட விருந்துகளுக்கு பணம் செலவிடுகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஸைனால் அபிடின் வலியுறித்தியதாக பெர்னாமா அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான பணம் தேவைப்படும். பணம் எங்கிருந்து வருகிறது என்று மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் என்று ஸைனால் கூறினார்.
அதில் தவறான வழியில் ஈட்டிய பணம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று பினாங்கு அம்னோ நம்புகிறது என்றாரவர்.
துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அஹமாட் ஸாகிட் ஹமிடி பினாங்கில் ஏராளமான சட்ட விரோத சூதாட்ட நடவடிக்கைகள் இருப்பதாக கூறியிருந்ததை ஸைனால் குறிப்பிட்டார்.
அனைவரையும் ஹஜ் அழைத்து செல்கிறேன் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னவர்களும் ஒரு கிளை தலைவனுக்கு 1000 ரிங்கிட் லஞ்சமாக கொடுத்தவர்களும் உங்கள் பக்கம் அதிகம் என்பது என்பது இந்த அம்னோ தலைவருக்கு தெரியாதா ? புனிதமான இந்த மாதத்தில் இப்படி ஒரு பேச்சா ?