இளவயதினர் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்ட டி. நவீன் மூளைச் சாவு அடைந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் இப்போது இறந்து விட்டார்.
வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் ஓஸ்மான் அளித்த தகவலின்படி நவீன் இன்று மாலை மணி 6.00 அளவில் இறந்து போனார்.
கடந்த வெள்ளிக்கிழமை நவீன் பினாங்கு மருத்தமனையில் சேர்க்கப்பட்டார்.
நவீனின் நண்பர், 19 வயதான டி. பிரிவீன் முகத்தில் ஏற்பட்டுள்ள காயங்களுக்காக சிகிட்சை பெற்று வருகிறார்.
நீதி வழங்கப்படும்
இதனிடையே, பிரதமர் நஜிப், நவீன் மரணம் குறித்து அவரின் குடும்பத்தாருக்கு அவரது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
நீதி வழங்கப்படும். அவரை தாக்கியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நஜிப் அவரது செய்தியில் கூறியுள்ளார்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
சம்மந்தப்பட்ட துக்க வீட்டினர் குடும்ப உறுப்பினரை இழந்து எப்படியெல்லாம் மனவேதனைப் பட்டுக்கொண்டிருப்பார்கள் என்ற மனிதாபிமான சிந்தனை கொஞ்சமும் இன்றி இரக்கமற்றவர்களாய் இன்று காலை விழுதுகள் நிகழ்ச்சியில் மரணமுற்றவர் குறித்த பேட்டியும் கருத்துக்களும்….இதை இன்றே உடனடியாக ஒளிபரப்பியிருக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. அதனால் எதுமும் ஆகப்போவதுமில்லை. இதுபோன்றவற்றை யாரும் உடனடியாக தடுத்து நிறுத்தி விடப்போவதுமில்லை. நாளையோ அல்லது அடுத்த நாளோ கூட இதை ஒளிபரப்பியிருக்கலாம்.
நவீன் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். மரணமுற்ற இளைஞர் நவீன் முகத்தை (புகைப்படத்தை) பார்க்கும்போதெல்லாம் என்னுடைய கண்களில் கண்ணீர் கசிகிறது. ஏனோ தெரியவில்லை.
இந்த கொடூர கொலையாளிகளை தப்பிக்க விடக்கூடாது ! தகுந்த தண்டனை தராவிட்டால் இன்னும் எத்தனையோ அப்பாவி மாணவர்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாவது கொல்லப்படுவது நிச்சயம் ! அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்த்த அனுதாபங்கள் !!
பிரதமரின் ஆழ்ந்த அனுதாபங்கள் ! நமது அனுதாபங்கள் ! உயிரை பிரிந்து துக்கத்தில் வாழும் குடும்பத்திற்கு அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது ! அவரை கொடுமை படுத்தி கொடூரமான முறையில் கொலை செய்த அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் ! என்பது அனைவரின் வேண்டுகோள் பிரதமர் உட்பட ! நீதி ! நேர்மை ! இங்கு நிலைநாட்ட படுமா ! அல்லது இதுவும் கிடப்பில் போடப்படுமா ! இனி வரும் காலங்களில் இப்படி அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க அரசாங்கமும் ! நமது காவல் துறையும் என்ன நடவடிக்கை மேற்க்கொள்ள விருக்கிறது !
அராஜகம் தொடருமானால் சமுதாயத்திற்கு அவமானமே . தாக்கியவர்கள் மீது எடுக்கப்படும் கடுமையான தண்டனை மற்றவர்களுக்கு படமாக அமையட்டும்.
நவீன் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் நாட்டின் பிரதமர் ஆரம்ப பள்ளிகளிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அவரவர் சமய போதனை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் சமயக் கல்வியை படிக்கும் நேரத்தில் இதர சமயத்தினரும் தங்கள் சமயக் கல்வியை படிப்பதால் வன்முறை கலாச்சாரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இதனை மத்திய அரசு அமல்படுத்த முன் வருமா என்பது கேள்வி குறியே!
இந்த பையன் எவ்வளவு வேதனையால் துடித்திருப்பான். நினைத்து மனம் வேதனையாக உள்ளது. ஆத்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்
இந்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவதுடன் சம்பந்த பட்ட பெற்றோர்களையும் தண்டிக்க வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகளை ஒழுங்காக வளர்ப்பார்கள்
தமிழ் குண்டர்களின் கொடூரத்தில் விளைந்த விபரீதம். சட்டம் இரும்பு கரம் கொண்டு இந்த கொடூரத்தை செய்தவர்களை கழுவில் எற்றி நீதி கிடைக்க செய்ய வேண்டும். அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபம்.
நாம் என்ன சொன்னாலும் ஒன்றும் நடக்காது. காரணம் இதை எல்லாம் கண்டு கொள்ள நம்பிக்கை நாயகனுக்கோ அவனின் குஞ்சுகளுக்கு நேரம் கிடையாது–அக்கறையும் கிடையாது-காரணம் இவர்களின் புத்தி இன்றும் வளரவில்லை. நவீனை கொன்றது நம்ம ஊர் ராஜாக்கள்–தமிழ்/இந்தியர்கள் . திமிர் பிடித்து ஈன தனமாக தமிழ் பட வரலாற்றை பின்பற்றும் கேவல ஜென்மம். வேறு என்ன சொல்ல– இதெல்லாம் தேவையா? பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?
ஆமாம் இந்த கொடூரமான செயலுக்கு வீரம் என்று முத்திரை குத்துவார்கள் குண்டர் கும்பல்கள். இந்த கேவல ஜென்மங்களுக்கு பின்னல் அரசியல் தலைவர்கள். முன்னாள் குண்டர் கும்பல் தலைகள் இப்பொழுது அரசியல் தலைகள் . கேவலம் கேவலம் . அனால் எல்லாம் முடிந்த பிறகு மாலை போடுவான்ங்க வெக்கமில்லாம .
அந்த குண்டர்களை பெற்றவர்களும் ஈனப்பிறவிகஊள் என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த செய்தியை ஊடகங்களில் பார்த்தே நமக்கு வேதனை தாங்க முடியவில்லயே.பாதிப்புக்குள்ளான அந்த தாயின் உள்ளம் எப்படி வேதனை பட்டிருக்கும்.நவீனின் தங்கைபின் உள்ளம் எப்படி சிதறியிருக்கும்.பெற்றவன் சரியாக இருந்திருந்தால் பிள்ளைகளும் சரியாக வளர்ந்திருக்கும்.பெற்றவனும் காட்டான் என்றால் பிள்ளைகளும் காட்டான்தான்.ஆகவே குற்றச்செயலில் ஈடுபடும் பதின்ம வயது மாணவர்களின்பெற்றேரர்களையும் தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்
இவர்களுக்கு கடுமையான மரணதன்டனை இட வேன்டும்.
தோன்றிற்பகழொடுதோன்றுக அஃதிலார்
தோன்றலின்தோன்றாமை நன்று 236
இசையால்உயரநினைத்த இளைஞனுக்கு
நேர்ந்த கொடுமைநம்மைகண்கலங்வைக்கி
றது,அன்னாரின்குடும்பத்திற்க்கு எமதுஆழ்ந்த
அனுதாபங்கள்!