பிகேஆர் எம்பி ஆர்.சிவராசா, தாம் பள்ளிவாசலில் அரசியல் பேசியதாகக் கூறியுள்ள கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
வேடிக்கை என்னவென்றால் தெங்கு அட்னானும் அக்குற்றச்சாட்டை செராஸ் பள்ளிவாசல் ஒன்றில்தான் கூறியிருக்கிறார் என்று குறிப்பிட்ட சிவராசா அக்குற்றச்சாட்டு பொய்யானது, தீய நோக்கத்துடன் கூறப்பட்டது என்றார்.
சிவராசா சிலாங்கூரில் ஒரு பள்ளிவாசலுக்குச் சென்றபோது அங்கு அரசியல் பேசினார் என அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
“நான் சுபாங் கம்போங் மலாயுவில் உள்ள மஸ்ஜித் அன் -னூர் சென்றிருந்தபோது அங்கு அரசியல் உரை நிகழ்த்தியதாக அவர் பொய்யாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தீய நோக்கத்தோடுதான் அவ்வாறு சொல்லியிருக்கிறார். ஏனென்றால் பரவலாக அறிவிக்கப்பட்டிருந்த அச்செய்தியை நான் ஏற்கனவே முந்தைய பத்திரிகை அறிக்கைகளில் மறுத்துள்ளதை அவர் அறிவார்.
“இந்தப் பொய்யான குற்றச்சாட்டு நான் பள்ளிவாசலை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் அதற்கு உரிய மதிப்பளிக்கவில்லை என்பதாகவும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது”, என சிவராசா கூறினார்.
இந்த வழக்கின் மூலம் வழிபாட்டு நிலையங்களில் அரசியல் கூடாது என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டால் எல்லோருக்கும் நல்லது
இந்து கோவிலுக்கும் பொருந்தினால் நல்லது, mic கூஜா தூக்கிகள் சேட்டை குறையும் …..
இந்த வழக்கில் ஒன்றும் ஆகாது ஆனாலும் வழக்கு போடுவதே சரி.