ஒரு தலைவரை, ஓர் அமைப்பை அல்லது ஒரு நாட்டையே வீழ்த்துவதற்காக வேண்டுமென்றே பரப்பப்படும் அவதூறுகளுக்குப் பலியாக வேண்டாம் என்று பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார்.
அவர்கள் தங்களுடைய தவறான பிரச்சாரத்திற்கு சமூக ஊடகங்களை தங்களுடைய முக்கியமான ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறார். அதன் மூலம் மக்களைக் குழப்பி அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று ரோஸ்மா கூறினார்.
அவதூறுகளுக்கு ஆளானவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். மேலும் இது போன்ற போலியான கூற்றுகளால் சமூகம் அச்சமடைகிறது என்று அவர் தற்காப்பு அமைச்சின் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பேசிய போது கூறினார்.
நெருப்பு இல்லாம புகை வராது.