சட்டத்துறை தலைவர் முகமட் அபாண்டி அலி அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) 1எம்டிபி பற்றி வெளியிட்ட மிக அண்மையத் தகவல்களை அசூர வேகத்தில் நிராகரித்தது குறித்து உரிமைகள் குழுமம் ஹாகாம் தலைவர் அம்பிகா அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஹாகாம் உதவித் தலைவர் குர்தியால் சிங் நிஜாருடன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அபாண்டி நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று அவர் கூறினார்.
“ஏஜி, இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்? ஏஜி அவரது பதவியின் நேர்மையைப் பாதுகாப்பதற்கு அவர் இப்போது கட்டாயமகச் செயல்பட வேண்டும். இல்லையென்றால் அவர் தவறு செய்பவர்களைப் பாதுகாக்கிறார் என்று மக்கள் கருதுவார்கள்”, என்று அம்பிகா மேலும் கூறினார்.
இதற்கு முன்னதாக, புதிய ஆதாரங்கள் இருந்தால் தவறு இழைத்தவர்களுக்கு எதிராக விசாரணையை மீண்டும் தொடங்குவேன் என்று அபாண்டி கூறியிருந்ததை அம்பிகா சுட்டிக்காட்டினார்.
டிஒஜே மேலும் இப்புதிய ஆதாரங்களை அளித்துள்ளது. இதற்குமுன்னும்கூட, நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான ஆதாரம் இருந்தது என்று கூறிய அவர், அபாண்டிக்கு அவர் பொதுநலத்தின் பாதுகாவலர் என்பதை அம்பிகா நினைவுறுத்தினார்.
செவிடன் காதில் சங்கு ஊதி என்ன பயன் ?
அ-பண்டி வேறு எதற்க்காக காத்திருக்க போகிறது? அவன் செவிடனும் அல்ல. இது மட்டும் முதலாம் உலக மாக இருந்திருந்தால் இந்த நாதாரிகள் இன்னும் கோலோச்சி கொண்டிருக்க முடியுமா? இதுதான் ஆசிய கலாச்சாரம்.