அமெரிக்க நீதித்துறையின் சிவில் வழக்கு பதிவு பற்றி விவாதிக்க நாடாளுமன்ற அவசரக் கூட்டம் வேண்டும், வான் அசிஸா

 

Wanazizacallsforemergencysessionofparliementஅமெரிக்க நீதித்துறை (டிஒஜே) 1எம்டிபிக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிக்க மலேசிய நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறுகிறார்.

புதிய குற்றச்சாட்டுகள் நாட்டின் நற்பெயருடன் சம்பந்தப்பட்டுள்ளதால், அக்குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தை எவ்வளவு சீக்கிரத்தில் கூட்ட முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் கூட்ட வேண்டும் என்று வான் அசிஸா இன்று விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மிக முக்கிய விவகாரங்களை விவாதிக்க நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல என்று கூறிய அசிஸா, அது முன்பு நடத்தப்பட்டுள்ளது என்றார்.

ஆனால், அப்படி ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் பிரதமர் நஜிப்புக்கு மட்டுமே உண்டு.

ஆகையால், டிஒஜே எழுப்பியுள்ள புதிய குற்றச்சாட்டுளை விவாதிக்க நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமரை தாம் வலியுறுத்துவதாக அசிஸா மேலும் கூறினார்.

இது அரசாங்கம் அதன் பெயரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்றாரவர்.