கூச்சிங் உயர் நீதிமன்றம், டிங் தியோங் சூனை பூஜூட் சட்டமன்ற உறுப்பினராக நிலைநிறுத்தி இன்று தீர்ப்பு அளித்தது.
இதனை இன்று தம் முகநூல் பதிவில் அறிவித்திருந்த சரவாக் டிஏபி செயலாளர் ஏலன் லிங், பல காரணங்களால் டிங் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது செல்லாது என்று நீதிபதி குறிப்பிட்டதாகக் கூறினார்.
டிங், ஆஸ்திரேலிய குடியுரிமை வைத்திருந்தார் எ்ன்றும் அதனால் சரவாக் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்றும் கூறப்பட்டு சட்டமன்றத்திலிருந்து நீக்கப்பட்டார்.
அவர் நீக்கப்பட்டதை அடுத்து ஜூலை 4-இல் பூஜுட் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இனி, இடைத் தேர்தல் நடக்க வழியில்லை.
ஆனால், சரவாக் பிஎன் மேல்முறையீடு செய்யக்கூடும்.
தர்மம் நிச்சயம் வெல்லும் .