பெட்ரோலின் சில்லறை விலையை நிர்ணயிக்க புதிய முறை ஒன்று கடைப்பிடிக்கப்படும் என்றும் அது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறினார்.
உள்நாட்டு எண்ணெய்த் தொழில் திடமாக இருப்பதை உறுதிப்படுத்த அது முக்கியம் என்று குறிப்பிட்ட அமைச்சர், புதிய முறை குறித்து எண்ணெய்த் தொழிலில் சம்பந்தப்பட்ட அனைவருடனும் அமைச்சு அடுத்த வாரம் கலந்துரையாடும் என்றார்.
“எண்ணெய் விலை குறையும்போது பாதிப்புறும் பெட்ரோல் நிலய உரிமையாளர்கள்மீது மக்கள் பரிவு காட்ட வேண்டும். பெட்ரோல் விலை குறையும்போது பாதிக்கப்படுவது தாங்கள்தான் என்று அவர்கள் ( பெட்ரோல் நிலய உரிமையாளர்கள்) நினைக்கிறார்கள்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிச்சயமற்ற எண்ணெய் விலைகளால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு உதவுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளப்போவதாகவும் அமைச்சர் சொன்னார்.
பெட்ரோல் விலை ஏறும்போது அதிக லாபம் அடைவது அவர்கள் தானே.லாபத்தை பயனீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாரா?
உரிமையாளர் சீனன் என்றால் கண்டுக்க மாட்டீங்க! இப்ப என்ன ஆச்சு?