ஜனவரியிலிருந்து 26,384 சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர்

illegalஜனவரியிலிருந்து    நேற்று  வரை,   மொத்தம்     26,384  சட்டவிரோத   குடியேறிகள்    அவர்களின்   நாடுகளுக்குத்    திருப்பி   அனுப்பப்பட்டிருப்பதாக    குடிநுழைவுத்துறை  தலைமை    இயக்குனர்     முஸ்தபார்   அலி    கூறினார்.

அவர்கள்   நாடு  முழுவதும்    மேர்கொள்ளப்பட்ட    6,936    அதிரடி   நடவடிக்கைகளின்போது   பிடிபட்டவர்கள்  என்றாரவர்.   அந்நடவடிக்கைகளின்போது    75, 190   வெளிநாட்டவரிடம்   விசாரணை   நடத்தப்பட்டது.

“அதே  வேளையில்,  21,717   சட்டவிரோத   குடியேறிகள்  பல்வேறு   குடிநுழைவுக்  குற்றங்களுக்காக       கைது    செய்யப்பட்டார்கள்.  619   முதலாளிகளும்   கைது   செய்யப்பட்டனர்.”,  என்றவர்    செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.